வாழ்க்கைத் துணை தேடும் சவால் பற்றி கலந்துரையாடல்

இந்து இளங்கோவன்

சிங்­கப்­பூ­ரில் திரு­ம­ணம் செய்­து­கொள்­வோ­ரின் எண்­ணிக்கை ஆண்­டுக்கு ஆண்டு சரிந்­து­கொண்டே வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­கள் கல்­வி­ கற்பதற்­கும் ஒரு நிலை­யான வேலையைத் தேர்­வு­செய்­வ­தற்­கும் அதிக ஆண்­டு­கள் செல­வ­ழிப்­ப­தால், அதி­க­மா­னோ­ரின் திரு­மண வாழ்க்கை பின்­னுக்குத் தள்­ளப்­ப­டு­கிறது என்­பது சமூ­க­வி­ய­லா­ளர்­க­ளின் கருத்து.

பல பொறுப்­பு­களை சம­நி­லைப்

­ப­டுத்­து­ம் முயற்சியில், அவர்­கள் வாழ்க்­கை­யின் முக்­கிய அம்­சங்­க­ளாக கரு­தப்படும் தொழில், நிதி, பெற்­றோர் போன்­ற­வற்­றிற்கு அதிக முன்­னு­ரிமை அளிக்­கி­றார்­கள்.

காலம் தள்ளிப் போகப் போக பல­ருக்குத் திரு­ம­ணம் என்­பது கேள்­விக்­கு­றி­யாக மாறு­கிறது.

அதி­லும் சிங்­கப்­பூ­ரில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஏற்ற துணையைக் கண்­ட­றி­வது என்­பது தனிச்

சவா­லாக இருந்து வரு­கிறது.

துணையைக் கண்டு பிடிக்க உத­வும் 'dating apps' என்­னும் செய­லி­களைப் பயன்­ப­டுத்­து­வ­தில் கூட நிறைய தயக்­கம் நில­வு­கிறது.

இந்த வார முரசு பிஸ்ட்­ரோ­வில், இந்தச் சவால்­களை எதிர்­கொண்டு புது­மணத் தம்­ப­தி­க­ளாக 6 மாதத்­திற்கு முன் தங்­க­ளது வாழ்க்­கையைத் துவங்­கிய கௌத்­த­மன் ஹரி­தாஸ், 32, ஜெய­சுதா சமுத்­தி­ரன், 30, தங்­க­ளது கருத்­துக்­களைப்

பகிர்ந்­து­கொண்­டுள்­ள­னர்.

கடந்த ஆண்டு கொவிட்-19 கிருமிப் பர­வலின் நெருக்­க­டிக்கு மத்­தி­யில் இவர்­க­ளது திரு­ம­ணப் பதிவு நடந்­தே­றி­யது.

தங்­க­ளது வாழ்க்­கை­யில் அதிர்ஷ்­டம் எட்டிப் பார்த்து சரி­யான நேரத்­தில் சரி­யான சம­யத்­தில் தாம் இரு­வ­ரும் சந்­திக்­கும் வாய்ப்பு கிடைத்­த­தாக கூறிய இந்தத் தம்­ப­தி­யி­னர், ஏற்ற துணையைக் கண்­ட­றிய பலரையும் சந்­தித்து உரை­யாடிப் பழ­கு­வது அவ­சி­யம் என்­னும் கருத்தை முன் வைத்தனர்.

பல மொழி, கலாசார நட­வ­டிக்­கை­களில், நிகழ்ச்­சி­களில் பங்­கு­பெற்று தம்மைப் போன்­ற­வர்­களை சந்­தித்து சமூக வலையை விரிவு படுத்­து­வது நல்­லது என்­னும் ஆலோ­சை­யை­யும் வழங்கி­னர்.

"பல்­க­லைக்­க­ழகப் படிப்பை முடிக்­கும் வரை பெற்­றோர்­ படிப்­பில் மட்­டும் கவ­னத்தைச் செலுத்­து­வதை முன்­னிலைப்படுத்­து­கின்­ற­னர். காதல், துணையைத் தேர்வு செய்­வது போன்­றதைப் பெரும்­பா­லான பெற்­றோர் ஆத­ரிப்பதில்லை.

"இத­னால் பல­ருக்கு துணையைத் தேர்ந்­தெ­டுக்­கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. பல்­க­லைக்­க­ழகப் படிப்பு முடிந்­த­தும் வேலைச் சுமை பல­ரை­யும் விழுங்கி விடு­கிறது.

இதற்கிடையே துணையைத் தேட முயற்­சி­கள் எடுத்­தா­லும் அது­வும் கடி­ன­மான ஒன்­றாக இருக்­கிறது.

"டேட்­டிங் செய­லி­கள், நண்­பர்­கள் இவர்­களைத் தவிர்த்து இதற்கு மற்­றொரு தீர்­வும் உள்­ளது. 'ஆண்ட்டி நெட்­ஒர்க்' என்று அதை அழைப்­பார்­கள்.

நமது சமூ­கத்­தில் உள்ள மூத்த பெண்­ம­ணி­கள் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரு­டன் உரை­யாடி, தங்­க­ளுக்குத் தெரிந்த திரு­ம­ணத்­திற்குத் தயா­ரான இளை­ஞர்­களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்­து­கொண்டு அவர்­க­ளுக்கு ஒரு துணையைத் தேட உத­வு­வ­தைத்­தான் 'ஆண்ட்டி நெட்­ஒர்க்' என்­ற­ழைப்­பர்," என்று நகைச்­சுவை கலந்த தனது எண்­ணங்­களை முன்­வைத்­தார்

ஜெய­சுதா.

துணையைத் தேடி தேர்­வு­ செய்­வது மட்­டு­மல்ல, திரு­ம­ண­மான பின்பு புது­மணத் தம்­ப­தி­யி­னர்

சந்­திக்­கக்­கூ­டிய பிரச்­சினை­களைப் பற்­றி­யும் வெளிப்­ப­டை­யாகப் பேசிய தம்­ப­தி­கள், ஒரு­வரை ஒரு­வர்

புரிந்­து­கொள்­வதைத் தவிர்த்து இரு குடும்­பத்­தா­ரும் ஒத்­துப்­போ­க­வேண்­டும் என்றும் அதில் பலர் சவால்­களை சந்­திக்­கக்­கூ­டும் என்­ற­னர்.

திரு­ம­ண­மா­வ­தற்கு முன்பு சிங்­கப்­பூ­ரில் தம்­ப­தி­கள் தங்­க­ளது தேவைக்கேற்ப கட்டப்படும் வீடு­களைப் பெறு­வது ஒரு முக்­கி­ய­மான படி­யாக கரு­தப்­ப­டு­கிறது.

ஆனால் கூட்­டுக் ­கு­டும்­பத்தை விரும்­பும் கௌத்­த­மன், ஜெய­சுதா, இது­போன்­ற­வற்­றிக்கு நேர வரை­முறை அவ­சி­யம் இல்லை என்று கூறி­னர்.

இந்த உரை­யா­டலைக் காண இந்த 'கியூ­ஆர்' குறி­யீட்டை வரு­ட­வும்:

முரசு பிஸ்ட்ரோ பாகம் 4

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!