தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரம்மாஸ்திராவின் 'குரலும் குறளும்'

1 mins read
4af53cdf-17d5-48f7-ac0f-6c5aeab0cc68
'குரலும் குறளும்' நிகழ்ச்சியைப் படைக்கும் பிரம்மாஸ்திரா இசைக் குழு. படம்: பிரம்மாஸ்திரா இசைக் குழு -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

இளை­யர்­க­ளி­டம் தமிழ் இலக்­கிய கூறுகளைக் கொண்டு சேர்த்­தி­டும் வேளை­யில் அது அவர்­க­ளுக்குப் பிடித்த பாணி­யில் அமைய வேண்­டும்.

இதனை மன­தில் கொண்டு பிரம்­மாஸ்­திரா இசைக்­குழு இவ்­வாண்­டின் தமிழ்மொழி விழா­வில் 'குர­லும் குற­ளும்' எனும் நிகழ்ச்­சி­யு­டன் இளை­யர்­க­ளோடு இணைந்­தது.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் இரண்­டா­வது முறை­யாக இது­போன்ற இசைப் படைப்பு தமிழ் மொழி விழா­வில் இடம்­பெ­று­கிறது.

8 பாகங்­க­ளாக பிரிக்­கப்­பட்ட இந்த இசை காணொளி

நிகழ்ச்­சி­யில், நெறி­யா­ளர் அ‌ஷ்­வினி செல்­வ­ராஜ் திருக்­கு­றள் ஒன்றைத் தேர்ந்­தெ­டுத்து அதற்கு எளிய முறை­யில் புரிந்­து­கொள்­ளும் வித­மாக சுருக்கமாக விளக்­கம் தரு­கி­றார்.

அதனைத் தொடர்ந்து, அந்த திருக்­கு­ற­ளுக்குத் தொடர்­பு­டைய திரைப்­பா­டலை பிரம்­மாஸ்­திரா இசைக்­கு­ழு­வி­னர் படைக்­கின்­ற­னர்.

உள்­ளூர் பாட­கர்­க­ளான வி‌ஷ்ணு பாலாஜி, மீனாட்சி ஜோதி‌ஷ் திரைப்­பா­ட­லுக்குக் குரல் கொடுக்க, பின்­ன­ணி­யில் புல்­லாங்­கு­ழ­லில் நிரஞ்­சன் பாண்­டி­யன் இசைக்­குழு 'ஜேஸ்' இசை­யில் திரைப்­பா­ட­லுக்குப் புத்­து­யிர் அளிக்­கின்­ற­னர்.

கடந்த 10ஆம் தேதி 'ஃபேஸ்புக்', 'யூடி­யூப்' உள்­ளிட்ட ஊட­கத் தளங்­களில் கு.தர்­‌‌‌ஷன் காணொளி இயக்­கத்­தில் பதி­வேற்­ற­மா­னது.

எதிர்­கா­லத்­தில் பார­தி­யார் கவி­தை­கள் மையம்­கொண்ட பாடல்­கள் அல்­லது தமிழ் இலக்­கி­யத்­து­டன் மையப்­ப­டுத்­திய இசை நிகழ்ச்சியை நடத்த விரும்­பு­கிறது பிரம்­மாஸ்திரா இசைக்­ குழு.