பெருமளவில் நடைமுறையாகும் சுவாச பரிசோதனை சாதனங்கள்

பெருமளவில் நடைமுறையாகும் சுவாச பரிசோதனை சாதனங்கள்

2 mins read
302c0601-70b3-4f19-8647-dbe2518b61f4
சில்வர் ஃபேக்டரியின் 'டிரேசிஎக்ஸ்' என்ற கொவிட்-19 சுவாச பரிசோதனை சாதனம், இரண்டு நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் முடிவுகளைத் தெரிவிக்கும் ஆற்றலுடையது. படம்: அமைச்சர் ஓங் யி காங் ஃபேஸ்புக் -

கொவிட்-19 கிருமித்தொற்று முடிவுகளை விரைவில் காட்டும் தன்மை

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை உடனே உறுதி செய்­யக்­கூ­டிய சுவாச பரி­சோ­தனை சாத­னங்­கள், கூடிய விரை­வில் இங்கு பெரு­ம­ள­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம். பாது­காப்­பான பயண ஏற்­பா­டு­க­ளுக்­கும் பெரு­ம­ள­வில் நடை­பெ­றும் நிகழ்­வு­க­ளின் பரி­சோ­தனை செயல்­மு­றைக்­கும் இது வச­தி­யாக அமைந்­தி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சாத­னங்­க­ளைத் தயா­ரிக்­கும் பணி­கள் தொடர்­பில் சிங்­கப்­பூர் மருத்­து­வத் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான 'சில்­வர் ஃபேக்டரி டெக்­னா­லஜி', தொற்று நோய்களுக்கான தேசிய நிலை­யம் (என்­சி­ஐடி), சாங்கி விமான நிலை­யம் மற்­றும் 'செர்­டிஸ்' பாது­கா­வல் நிலை­யம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கிறது.

'பிசி­ஆர்' பரி­சோ­தனை முடி­வு­களில் காணப்­படும் துல்­லி­யம், 'TracieX' என்ற சாத­னத்­தின் மூலம் ஓர­ள­வுக்­குப் பெற முடி­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால் 'பிசி­ஆர்' சோத­னை­யைப் போல் அல்­லா­மல் கிரு­மித்­தொற்றை உறு­தி­செய்ய, சாத­னத்­திற்கு இரண்டே நிமி­டங்­கள் போதும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஒரு முறை பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய இந்­தச் சாத­னத்­தின் உணர்­தி­றன் ஆற்­றல், 95 விழுக்­காட்­டுக்கு மேல் என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், பிசி­ஆர் பரி­சோ­த­னையை விட சாத­னத்­தின் விலை குறைவு என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. ஒரு சாத­னத்­தின் விலை 20 அமெ­ரிக்க டாலர் (S$26) ஆகும்.

இதற்­கி­டையே, என்­சி­ஐடி, சாங்கி விமான நிலை­யம் முனை­யம் ஒன்று, செர்­டிஸ் ஆகி­ய­வற்­றில் முன்­னோட்­டக் கட்­டம் தொடங்­கி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது­வரை, 400க்கும் மேற்­பட்­ட­வர்­கள் சாத­னம் வழி பரி­சோ­தனை செய்து­கொண்­ட­தாக சில்­வர் ஃபேக்டரி தெரி­வித்­தது.

மார்ச் மாதம் சாங்­கி­யில் தொடங்­கப்­பட்ட முன்­னோட்­டத்­தின்­போது, ஒரு சில பய­ணி­க­ளி­டம் விருப்­ப அடிப்­ப­டை­யில் தங்­க­ளின் சுவாச மாதிரி தரு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

அவ்­வ­கை­யில் சுவாச பரி­சோ­தனை சாத­னங்­கள் மேலும் வச­தி­யாக அமைந்­தி­ருப்­ப­தா­க­வும் பய­ணி­க­ளுக்­கான விமான நிலைய அனு­ப­வத்தை சுமு­க­மாக்க உத­வு­வ­தா­க­வும் சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தைச் சேர்ந்த திரு அல்­பெர்ட் லிம் கூறி­னார்.

இத­னால் விமா­னப் பய­ணங்­களை மீண்­டும் திறப்­ப­தற்­கான திட்­டங்­க­ளுக்­கும் ஓர் உந்­து­தல் கிடைக்­கும் என்­றார் அவர்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழத்­தின் கீழ் உரு­வா­கிய சில்­வர் ஃபேக்டரி, இவ்­வாண்டு ஜூன் முதல் குறைந்­தது 200,000 சுவாச பரி­சோ­தனை சாத­னங்­களை ஒரு மாதத்­தில் தயா­ரிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது.

படிப்­ப­டி­யாக இந்த எண்­ணிக்­கையை மாதத்­திற்கு இரண்டு மில்­லி­யன் சாத­னங்­க­ளாக்­கு­வதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளது.