செய்திக்கொத்து

எஸ்பிஎச்சின் ஒலிபரப்புகளைக்

கேட்பவர்களுக்குப் புதிய செயலி

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வழங்கும் பல்வேறு வானொலி ஒலிவழி நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள், இனி ஒரு புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வானொலி நிகழ்ச்சிகளுடன் வலையொளிப் பதிவுகளும் பிரத்தியேக அம்சங்களும் புதிய செயலியில் அடங்கும் என்று கூறப்பட்டது. சுகாதாரம், பொழுதுபோக்கு, குற்றச் செயல்கள், திகில் போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில் வலையொளிப் பதிவுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அடுத்து வரும் மாதங்களில் மேலும் பல புதிய அம்சங்கள் செயலியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறுந்தகவல் அனுப்பும் சேவையும் செயலிக்குள் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டது.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாக இயக்குநர்

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் புதிய நிர்வாக இயக்குநராக 42 வயது திருவாட்டி லீ சியவ் ஹுவீ (படம்) பதவி ஏற்றுள்ளார். இவர் இதற்குமுன் மக்கள் கழகத்தில் 18 ஆண்டுகளாக வெவ்வேறு பொறுப்புகளில் இருந்தவர். சென்ற ஆண்டு கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில், உதவி தேவைப்பட்ட குடும்பங்களுக்கும் உள்ளூர் வர்த்தகங்களுக்கும் ஆதரவு வழங்கும் பல்வேறு தேசிய உதவித் திட்டங்களை இவர் வழிநடத்தினார். பலதரப்பட்ட பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றிய இவரது பரந்த அனுபவமும் குடியிருப்பாளர்களுடன் இவர் ஏற்படுத்திக்கொண்ட நல்லுறவும், பயனீட்டாளர்கள் தற்போதைய சவால்மிக்க காலகட்டத்தைக் கடந்துவர உறுதுணையாக இருக்கும் என்று தாம் நம்புவதாக சங்கத்தின் தலைவர் லிம் பியாவ் சுவான் குறிப்பிட்டார்.

புதிதாக 2,300 ஊழியர்களை

வேலையில் அமர்த்தும் சிட்டிகுரூப்

சொத்துகள் தொடர்பான தன் உலகளாவிய வர்த்தகத்தை வளர்த்துக்கொள்ளும் வகையில் சிட்டிகுரூப், சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் 2,300 ஊழியர்களை வேலையில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், இரு நாடுகளிலும் உள்ள அதன் சொத்து நிர்வாக மையங்களில் அதிநவீனத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க வங்கியான சிட்டி, அதன் ஆசிய பசிபிக் கிளை மூலம் மேலும் வளர்ச்சி அடையத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

ஜாலான் புக்கிட் மேராவுக்கு மாற

உள்ள சுகாதார அறிவியல் ஆணையம்

சுகாதார அறிவியல் ஆணையம், ஊட்ரம் ரோட்டில் தற்போது அமைந்துள்ள அதன் கட்டடத்திலிருந்து ஜாலான் புக்கிட் மேரா பகுதிக்கு மாறவுள்ளது. ஒன்பது மாடி கொண்ட ஆய்வுக்கூட கட்டடம், 13 மாடி கொண்ட அலுவலகக் கட்டடம், மூன்று நிலத்தடி நிலைகள் ஆகியவற்றுடன் சிலாட் தொடக்கப்பள்ளி முன்னதாக இருந்த வளாகத்தில் ஆணையத்தின் புதிய கட்டடம் அமையவுள்ளது. ரத்தம் தொடர்பான சேவைகள், சுகாதாரப் பொருட்கள் தொடர்பான விதிமுறைகள், பயன்முறை அறிவியல்கள் ஆகிய மூன்று பிரதான பொறுப்புகளையும் தொடர்ந்து ஆணையம் புதிய கட்டடத்தில் ஆற்றி வரும் என்று தெரிவிக்கப்பட்டது. திட்டமிடல் கட்டத்தில் ஆணையத்தின் புதிய கட்டடம் உள்ளதென ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். திட்டமிடல் 2014ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

முக்கிய செம்கார்ப் வாடிக்கையாளர் பயனீட்டுச் சேவை ஒப்பந்தம் ரத்து

'ஈஸ்ட்மேன் கெமிகல் சிங்கப்பூர்' அதன் பயனீட்டுச் சேவை ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்வதாக செம்கார்ப் நிறுவனத்திற்கு அறிக்கை கூறியது. ஜூரோங் தீவில் உள்ள அதன் உற்பத்தித் தளச் செயல்பாடுகளை ஈஸ்ட்மேன் நிறுத்திக்கொண்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1999ஆம் ஆண்டு முதல் ஈஸ்ட்மேன் நிறுவனத்திற்கு செம்கார்ப் பயனீட்டுச் சேவைகளை வழங்கி வருகிறது. செம்கார்ப் 2020 நிதியாண்டு லாபத்தில் ஈஸ்ட்மேன் 5% பங்களித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செம்கார்ப் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று 2% சரிந்ததாக கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!