செயற்கை நுண்ணறிவு வழி பாதுகாப்பை வலுவாக்கும் புதிய தொழில்நுட்பம்

அர­சாங்க நிதி­யு­டன் சிறிய, நடுத்­தர நிறு­வ­னம் ஒன்று கணி­னி­க­ளுக்­கான 'திட­நிலை இயக்கி' ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ளது.

கணி­னித் தர­வு­க­ளைப் பெற முய­லும் இணைய ஊடு­ரு­வி­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­க­ளைத் தடுத்து நிறுத்­தும் ஓர் இறு­திக்­கட்­டத் தற்­காப்­புச் சாத­னம் செயற்கை நுண்­ண­றிவு அடிப்­ப­டை­யில் வழங்­கு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், இயக்­கி­யைச் சேதப்­ப­டுத்த முயற்சி செய்­தால், ஒரு வினா­டிக்­குள் அதில் உள்ள தர­வு­கள் அனைத்­தும் தானாக அழிந்­து­போகும் தன்­மை­யும் அதற்கு உள்­ள­தாக சாத­னத்தை உரு­வாக்­கிய 'ஃபிளெக்­ஸன்' நேற்று கூறி­யது.

சாத­னத்­தின் மாதிரி வடி­வத்­தைப் பயன்­ப­டுத்­திப் பார்ப்­ப­தற்­காக அர­சாங்­க­மும் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

உள்­ளூர், வெளி­நாட்டு ராணுவ, தற்­காப்பு நிறு­வ­னங்­களும் சாத­னப் பயன்­பாட்­டில் ஆர்­வம் காட்­டு­வ­தாக நிறு­வம் தெரி­வித்­தது.

மருத்­து­வம், விமா­னப் போக்­கு­வரத்து, அச்­சி­டு­தல் ஆகிய துறை­களைச் சார்ந்த அனைத்­து­லக நிறு­வ­னங்­களும் இச்­சா­த­னத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தில் ஈடு­பாடு காட்­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்­பி­ட­மி­ருந்து பெறப்­பட்ட நிதி­யி­லி­ருந்து நிறு­வ­னம் சாத­னத்தை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தேசிய அள­வில் இணை­யப் பாது­காப்பு மற்­றும் உத்­தி­பூர்­வத் தேவை­களை நிறைவு செய்­யும் வகை­யில் புத்­தாக்க இணை­யப் பாது­காப்­புத் தீர்­வு­களை உரு­வாக்கு­வதை இந்­நி­தித் திட்­டம் இலக்­காகக் கொண்­டுள்­ளது.

மேலும், வர்த்­த­கப் பயன்­பா­டு­களும் இருக்­கும் நிலை­யில் தீர்வு­களாக அவை அமைய வேண்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சாத­னம் இயங்­கும் முறை

சாத­னத்­தில் இருக்­கும் தர­வு­களை ஒரு­வர் பயன்­ப­டுத்த முயற்சி செய்­யும்­போது, ஏதே­னும் அசா­தா­ரண போக்கு தெரி­கி­றதா என்­பது முத­லில் சோதிக்­கப்­படும்.

சேதப்­ப­டுத்­தும் தன்­மை­யு­டைய 'மெல்­வேர்' மென்­பொ­ரு­ளு­டன் நப­ரின் பயன்­பாட்டு முறை ஒப்­பி­டப்­படும்.

அவ்­வாறு சந்­தே­கத்தை எழுப்­பும் வகை­யில் நப­ரது பயன்­பாடு அமைந்­தால் மேற்­கொண்டு அவர் பயன்­ப­டுத்­து­வ­தைத் தடுக்க, சாத­னம் தனக்கே காப்பு இட்­டுக்­கொள்­ளும். சாத­னத்­தின் பய­னா­ள­ருக்கு இது தொடர்­பில் மின்­னஞ்­சல் போன்ற வழி­களில் எச்­ச­ரிக்கை அனுப்­பப்­படும்.

மிரட்­டல் அளிக்­கும் ஊடு­ரு­வல் நீங்­கிய பின்­னர், பய­னா­ளர் தனது சாத­னத்­தில் உள்ள காப்பை நீக்­கி­விட்டு தொடர்ந்து பயன்­ப­டுத்­த­லாம் என்று கூறப்­பட்­டது.

சாத­னத்­தின் பயன்

இது­போன்ற இணைய ஊடு­ரு­வல் நடக்­கும்­போது, ஒரு நிறு­வ­னத்­தின் தர­வு­கள் அனைத்­தை­யும் பயன்­ப­டுத்த முடி­யாத வண்­ணம் ஊடு­ருவி தடுத்­து­வி­ட­லாம். நிறு­வனம் கேட்­கும் தொகை­யைக் கொடுத்­தால் மட்­டுமே ஊடு­ருவி அந்­தத் தடுப்பை அகற்­று­வ­தாக மிரட்­ட­லாம்.

இத்­த­கைய சூழல்­க­ளைச் சாத­னம் தவிர்க்க உத­வும் என்று கூறப்­படு­கிறது.

இணைய ஊடு­ரு­வி­கள் பயன்­படுத்­தும் உத்­தி­க­ளை­யும் சாத­னம் அறிந்­து­கொண்டு இனி­வ­ரக்­கூ­டிய இணைய மிரட்­டல்­க­ளுக்கு எதி­ராகப் பாது­காப்பு அளித்­தி­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஊடு­ரு­வி­கள் வேறு பெய­ரில் இயங்­கி­னா­லும், அவர்­க­ளது அணுகு­மு­றை­யைச் சாத­னம் கண்­டறிந்­து­வி­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!