சிங்கப்பூரில் தயாரான மின்சார மோட்டார் சைக்கிள்களை எஸ்எம்ஆர்டி நிறுவனம் விநியோகிக்க ஒப்பந்தம்

சிங்கப்பூரில் தயாரான மின்சார மோட்டார் சைக்கிள்களை எஸ்எம்ஆர்டி நிறுவனம் விநியோகிக்க ஒப்பந்தம்

1 mins read
56756456-74fd-4e7a-950f-e3fc400747a5
விவேக அம்­சங்­கள் கொண்டு அமை­ய­ உள்ள புதிய மோட்டார் சைக்கிள்கள், படத்தில் உள்ள 'ஸ்கோர்பியோ' ரகம் போல் இருக்கும். ஆனால் சற்று குறைந்த விலை­யி­ல், அம்சங்கள் குறைந்த நிலையில் இருக்கும் என்று கூறப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விவேக மின்­சார மோட்­டார் சைக்­கிள்­களை உரு­வாக்கி, அவற்றை விளம்­ப­ரப்­ப­டுத்தி விநி­யோ­கம் செய்­திட 'யூரோஸ்­போர்ட்ஸ் டெக்­னா­ல­ஜிஸ்' நிறு­வ­னத்­து­டன் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் கீழ் இயங்­கும் 'ஸ்ட்­ரைட்ஸ் டிரான்ஸ்­போர்ட்­டே­ஷன்' இணை­ய­வுள்­ளது.

இரு உள்­ளூர் நிறு­வ­னங்­களும் இத்­திட்­டம் தொடர்­பில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டி­ருப்­ப­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது. ஒப்­பந்­தப்­படி, சிங்­கப்­பூ­ரி­லும் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தி­லும் வர்த்­தக மின்­சார மோட்­டார் சைக்­கிள்­களை விநி­யோ­கம் செய்­யும் ஒரே நிறு­வ­ன­மாக 'ஸ்ட்­ரைட்ஸ்' நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இரண்டு மற்­றும் மூன்று சக்­கர மோட்­டார் சைக்­கிள் வகை­கள், குறிப்­பாக உணவு விநி­யோ­கம் மற்­றும் தள­வா­டப் பயன்­பா­டு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்று கூறப்­ப­டு­கிறது. இந்த வர்த்­தக பயன்பாட்டுக்கான மோட்­டார் சைக்­கிள்­களை யூரோஸ்­போர்ட்ஸ் டெக்­னா­ல­ஜிஸ் இவ்­வாண்­டின் இறு­திக் காலாண்­டுக்­குள் வெளி­யி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் குறிப்­பி­டத்­தக்க ஒரு மைல்­கல் என்­றார் யூரோஸ்­போர்ட்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி மெல்­வின் கோ.

வட்­டார நிலை­யில் மின்­சார வாக­னச் சந்­தை­கள், அவற்­றின் முழு­மை­யான ஆற்­றலை இன்­னும் வெளிப்­ப­டுத்­தாத பட்­சத்­தில், இந்த ஒத்­து­ழைப்பு அதற்கு வழி­கோ­லும் என்­றார் அவர்.

"மின்­சார வாகன சுற்­றுச்­சூ­ழ­லில் வர்த்­த­கங்­கள் வளர்ச்சி காணும் எங்­க­ளின் திட்­டங்­களில் இந்த ஒத்­து­ழைப்­பும் ஓர் அங்­க­மா­கும். இத­னால் மேலும் பசு­மை­யான ஒரு சிங்­கப்­பூர் மற்­றும் தென்­கி­ழக்­கா­சிய வட்­டா­ரம் உரு­வா­கும்," என்று எஸ்­எம்­ஆர்டி ரோடு ஹோல்­டிங்ஸ் தலை­வர் டான் கியன் ஹியோங் தெரி­வித்­தார்.

உல­கெங்­கும் கரிம வெளி­யேற்­றத் தரங்­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்டு வரும் நிலை­யில், மின்­சார வாக­னங்­க­ளின் உல­க­ளா­விய விற்­ப­னை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.