'முதியவர்கள் தடுப்பூசி போட அதிகளவில் முன்வருவர்'

'முதியவர்கள் தடுப்பூசி போட அதிகளவில் முன்வருவர்'

1 mins read
97fc8728-a048-469b-843c-9706b9f11e4b
-

சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை நல்ல முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், நடமாட்டப் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் இளம் வயதினரைக் காட்டிலும் 70 மற்றும் அதற்குமேல் வயதுடைய முதியவர்கள் குறைவான அளவிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், சக வயதினர் அல்லது தங்களது குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் பார்த்தபின் அவர்கள் அதிக நம்பிக்கை பெற்று, வரும் மாதங்களில் அதிகமான முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 மற்றும் அதற்குமேல் வயதுள்ள தகுதியுடைய முதியோரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் அல்லது அதற்கு முன்பதிவு செய்து உள்ளனர் என்று இம்மாதத் தொடக்கத்தில் நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

60 முதல் 69 வயதுக்கு உட்பட்ட தகுதியுடைய மூத்த குடிமக்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் அவ்வாறு செய்துள்ளனர். 70 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களே முதலில் தடுப்பூசி பெறத் தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.

"70 வயதும் அதற்கு மேற்பட்டவர்களிடத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் குறைவாக இருப்பதற்கு நடமாட்டப் பிரச்சினை அல்லது பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடு போன்றவை காரணமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது," என்று டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி துணைப் பேராசிரியர் ராகுல் மல்ஹோத்ரா கூறினார்.