சுவா சூ காங்கில் 40 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

சுவா சூ காங்கில் 40 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

2 mins read
a354309d-7c56-4f63-beb1-db78c6d29466
செய்தியாளர் கூட்டத்தின்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் செய்தியாளர்களிடம் காட்டப்பட்டன.படம்: சாவ்பாவ் -

கஞ்சா, போதை­மிகு அபின் உட்­பட 40 கிலோ­வுக்­கும் அதி­க­மான போதைப்­பொ­ருளை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு பறி­மு­தல் செய்­துள்­ளது.

பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்ள போதைப்­பொ­ருள் ஒரு வாரத்­துக்கு 12,400 போதைப் புழங்­கி­க­ளுக்­குப் போது­மா­னவை. அவற்­றின் மதிப்பு $2.3 மில்­லி­ய­னுக்­கும் அதி­கம் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப்­பொ­ரு­ளில் பெரும்­பா­லா­னவை சுவா சூ காங் அவென்யூ 4ல் 22 வயது மலே­சிய ஆட­வர் வசிக்­கும் வீட்­டில் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. 23.6 கிலோ கஞ்சா, 16.5 கிலோ போதை­மிகு அபின், 2 கிலோ ஐஸ் வகை போதைப்­பொ­ருள், ஏறத்­தாழ 110 எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள் ஆகி­ய­வற்றை பறி­மு­தல் செய்­த­தாக நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது.

1996ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஆக அதி­க­மான கஞ்­சா­வும் 2001ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஆக அதி­க­மான போதை­மிகு அபி­னும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

1996ஆம் ஆண்­டில் 33.4 கிலோ கஞ்­சா­வும் 2001ஆம் ஆண்­டில் 34.8 கிலோ போதை­மிகு அபி­னும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. ஆக அண்­மை­யில் நடத்­தப்­பட்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­யின்­போது சுவா சூ காங் அவென்யூ 4ல் உள்ள குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தின் தரைத்­த­ளத்­தில் சந்­தேக நபரை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். அவ­ரி­ட­மி­ருந்த நான்கு கஞ்சா பொட்­ட­லங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

சந்­தேக நப­ரின் படுக்­கை­ய­றை­யில் இருந்த எட்டு போதை­மிகு அபின் பொட்­ட­லங்­கள், இரண்டு ஐஸ் பொட்­ட­லங்­கள், எக்ஸ்­டசி மாத்­திரை ஆகி­யவை அதி­கா­ரி­

க­ளி­டம் சிக்­கின.

வீட்­டில் இருந்த மற்­றோர் அறை­யில் பைகளில் வைக்­கப்­பட்­டி­ருந்த 27 போதை­மிகு அபின் பொட்­ட­லங்­களும் 20 கஞ்சா பொட்­ட­லங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருள் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் காட்­டப்­பட்­டன.

பிர­பல ஜப்­பா­னிய கேலிச்­சத்­தி­ர­மான ஹலோ கிட்டி வடி­வில் இருந்த இளஞ்­சி­வப்பு நிறத்­தி­லான எக்ஸ்­டசி மாத்­தி­ரை­களும் அடங்­கும்.

"சிங்­கப்­பூர் போதைப்­பொ­ருள் உற்­பத்தி செய்­யும் நாடல்ல. பெரு­ம­ள­வில் போதைப்­பொ­ருளை உற்­பத்தி செய்­யும் வட்­டா­ரங்­கள்

சிங்­கப்­பூ­ரைச் சுற்றி இருக்­கின்­றன. இத­னால் சிங்­கப்­பூ­ருக்­குள் அதிக அளவு போதைப்­பொ­ருள் கடத்­தப்­படும் அபா­யம் உள்­ளது," என்று மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் உள­வி­யல் பிரிவு இயக்கு­ ந­ரான ஏரன் டாங் கூறி­னார்.

எனவே சிங்­கப்­பூர் தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்­றார் அவர்.