சட்ட விரோத கும்பலைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு 12 ஆண்டுகள், ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முதலீடு என்று கூறி மற்றவர்களிடமிருந்து ஏறத்தாழ $2.5 மில்லியனை அவர் பறித்தார்.
மோசடிக் குற்றம் புரிந்தது, போலி மியன்மார் கடப்பிதழை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை சீன நாட்டவரான 44 வயது வெய் யோங் ஒப்புக்கொண்டார்.
நான்கு பேருடன் சேர்ந்து 10 பேரை ஏமாற்றி வெய் யோங் பணம் பறித்ததாக நீதிமன்றத்திவ் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சீனாவில் வியாபாரம்
செய்துகொண்டிருந்தவர்கள்.

