'திடீர் வெள்ளம் பருவநிலை மாற்றத்துக்கான அறிகுறி'

'திடீர் வெள்ளம் பருவநிலை மாற்றத்துக்கான அறிகுறி'

1 mins read
00fa2122-38bf-4142-a175-5e70069e0c84
-

கன­மழை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் உள்ள பல பகு­தி­களில் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது.

இது பரு­வ­நிலை மாற்­றத்­துக்­கான அறி­குறி என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று தெரி­வித்­தார்.

இப்­பி­ரச்­சி­னையை எதிர்­கொள்ள திட்­ட­மி­டு­தல் மிக­வும் முக்கியம் என்­பதை இது உணர்த்­து­வ­தாக அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 20 ஆண்­டு­கள் இல்­லாத அள­வில் மழை­யின் தீவி­ரம் அதி­க­ரித்­துள்­ளது. அடிக்­கடி கன­மழை பெய்­வதை நாம் பார்க்­கி­றோம்," என்று ஆழ்சுரங்க நீர் முறைக்­கான இடத்­தைப் பார்­வை­யிட சென்­ற­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் கூறி­னார்.

அமைச்­சர் ஃபூவின் அமைச்­சின்­கீழ் செயல்­படும் பொதுப்

பய­னீட்­டுக் கழ­கம், சாக்­கடை மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்­குக் கடந்த பத்து ஆண்­டு­க­ளாக $2 பில்­லி­யன் செலவு செய்­துள்­ளது.

இந்தப் பணிகளுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ $1.4 பில்லியன் செலவு செய்யப்படும் என்று அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.