ரமலான் இலவச உணவுத் திட்டம் மின்னிலக்கமயமானது

ரமலான் இலவச உணவுத் திட்டம் மின்னிலக்கமயமானது

2 mins read
96625d0c-f29d-44b4-b6f3-daa379a6ed33
-

ரம­லான் நோன்பு காலத்­திற்­கான இல­வச உண­வுத் திட்­டம் மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தத் திட்­டம் 2016ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

திட்­டத்­தின்­கீழ் உட்­லண்ட்ஸ் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு இல­வச பிரி­யாணி வழங்­கப்­படும். முந்­திய ஆண்­டு­களில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தின் தரைத்­த­ளத்­தில் இல­வச பிரி­யாணி விநி­யோ­கிக்­கப்­பட்­டது. இந்­தத் திட்­டம் ஒவ்­வொரு முறை­யும் நூற்­றுக்­க­ணக்­கா­னோரை ஈர்த்­தது.

ஆனால் தற்­போ­தைய கொவிட்-19 சூழ­லின் கார­ண­மாக, ஒரே இடத்­தில் பலர் கூடு­வது கிரு­மிப் பர­வல் அபா­யத்தை ஏற்­

ப­டுத்­தக்­கூ­டும்.

எனவே, இந்­தப் பிரச்­சி­னையை எதிர்­கொள்­ளும் வித­மாக இத்­திட்­டம் மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இல­வச உண­வைப் பெற குடி­யி­ருப்­பா­ளர்­கள் இணை­யம் மூலம் பதிவு செய்­ய­லாம். அதன் பிறகு அவர்­க­ளுக்கு ஏற்­பு­டைய நாளில் இல­வச உண­வைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

Ramadan Belanja-A-Meal@Woodlands என்ற இந்­தப் புதிய மின்­னி­லக்­கத் திட்­டத்தை உட்­லண்ட்ஸ் மலாய் நற்­ப­ணிச் செயற் குழு­வும் உட்­லண்ட்ஸ் சமூக மன்­றத்­தின்­கீழ் செயல்­படும் உட்­லண்ட்ஸ் மின்­னி­லக்க அலு­வ­ல­க­மும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளன.

வாரத்­துக்கு ஓர் இல­வச

உண­வை குறிப்­பிட்ட சில உணவு அங்­காடிக் கடை­க­ளி­லி­ருந்தோ அல்­லது காப்­பிக் கடை­களில் உள்ள உண­வுக் கடை­க­ளி­லி­ருந்தோ குடி­யி­ருப்­பா­ளர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தப் புதிய அணு­கு­முறை கடந்த வாரம் தொடங்­கி­யது. இது நோன்பு காலம் முடி­யும் வரை நடை­மு­றை­யில் இருக்­கும்.

குறைந்த வரு­மா­னப் பிரி­வைச் சேர்ந்­தோ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.

திட்­டத்­தில் பதிவு செய்­து­கொள்­ப­வர்­க­ளின் கைபே­சி­

க­ளுக்கு கியூ­ஆர் குறி­யீ­டு­ உள்ள மின் அட்டை அனுப்­பி­வைக்­கப்­படும். இந்த மின் அட்­டையை உண­வுக் கடைக்­கா­ரர்­க­ளி­டம் காட்டி இல­வச உண­வைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

திறன்­பேசி வைத்­தி­ருக்­கா­த­வர்­கள் இல­வச உண­வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அட்­டை­களை உட்­லண்ட்ஸ் சமூக மன்­றத்­தி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­ள­லாம். ஒவ்­வொரு வார­மும் 1,000 இல­வச உண­வுப் பொருட்­கள் வரை விநி­யோ­கிக்­கப்­படும்.

இந்­தப் புதிய திட்­டத்தை நேற்று முன்­தி­னம் கம்­போங் அட்­மி­ரல்ட்டி உணவு அங்காடி நிலை­யத்­தில் செம்­ப­வாங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மரி­யம் ஜஃபார் தொடங்கி வைத்­தார்.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் உண­வுக் கடைக்­கா­ரர்­க­ளுக்­குக் கூடு­தல் வாடிக்­கை­யா­ளர்­கள் கிடைக்­கும் என்­றார் அவர்.