தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தமிழவேள் பற்றி அறிந்திடவேண்டும்'

3 mins read
095a9ca5-94b2-4cf6-9462-f82e7c8eaf51
தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழவேளின் 'தளபதி' என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தமிழவேள் நற்பணி மன்றத் தலைவர் திரு ப.தியாகராஜன் (அமர்ந்திருப்பவர்) நேற்று மிட்டாய் வழங்கி கொண்டாடினார். (இடமிருந்து) அதைப் பெற்றுக்கொள்ளும் திரு தினேஷ் பாபு, தமிழ்ப் புத்தகக் கடையின் உரிமையாளர் திரு வீரப்பன் ரஞ்சித், திரு ராஜமோகன். படம்: தமிழவேள் நற்பணி மன்றம் -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

சிங்­கப்­பூ­ரில் தமிழ் மொழி அதி­கா­ரத்­துவ மொழி­களில் ஒன்­றாக வீற்­றி­ருக்­கக் கார­ண­மாக இருந்­த­வர் என்று போற்­றப்­படும் தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பா­ணி­யின் 118வது பிறந்­த­நா­ளான நேற்று அவ­ரது தொண்­டர் ஒருவர் லிட்­டில் இந்­தி­யா­வில் கொண்­டா­டி­னார். எண் 143 டன்­லப் ஸ்தி­ரீட்­டில் அமைந்­துள்ள 'விஆர்777' தமிழ்ப் புத்­த­கக் கடை­யில் காலை 11 மணி முதல் நண்ப­கல் 12.30 மணி வரை அங்கு வந்த வாடிக்­கை­யா­ளர்­கள், அவ்­வ­ழியே நடந்த பொது­மக்­கள், அக்­கம்­பக்­கக் கடைக்­கா­ரர்­கள், ஊழி­யர்­க­ள் போன்றோருக்கு மிட்­டாய்­களை வழங்கி மகிழ்ச்­சி­யைப் பகிர்ந்­தார் தமி­ழ­வேள் நற்­பணி மன்­றத்­தின் தலை­வர் திரு

ப.தியா­க­ரா­ஜன், 80.

நாவிற்­குச் சுவை­யாக இனிப்பை வழங்­கி­ய­து­டன், ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தமி­ழ­வே­ளைப் பற்­றிய சுருக்­க­மான அறி­மு­கத்­தை­யும் அவர் கொடுத்­தார்.

"வாங்க, இன்­றைக்கு தமி­ழ­வேள் சாரங்­க­பா­ணி­யின் பிறந்­த­நாள். தமிழ் முரசை ஆரம்­பித்­த­வர். இன்­றைக்கு இங்கு நாம் தமிழ் பேசி தமி­ழில் எல்லா சேவை­களையும் பெறு­கி­றோம். இதுக்­கெல்­லாம் கார­ண­மா­ன­வர் அவர்," என்று திரு தியா­க­ரா­ஜன் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் கூறி­னார்.

"தமிழ்ப் புத்­த­கக் கடை­கள் பல இடங்­களில் முன்பு இருக்­கும். இப்­போ­தெல்­லாம் குறைந்­து­விட்­டது. தற்­போது இந்­தப் பெரிய கடை­யில் சஞ்­சி­கை­கள், புத்­த­கங்­கள் விற்­கப்­ப­டு­கின்­றன என்­பதை அறிந்து மகிழ்ந்­தேன்," என்­றார் திரு தியா­க­ரா­ஜன்.

தம் இளம் வயது முதல் சமூகச் சேவை­யில் நாட்­டம் கொண்ட திரு தியா­க­ரா­ஜன், அதற்கு தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பா­ணியே கார­ணம் என்­றார்.

"தமி­ழுக்­கும் தமி­ழ­ருக்­கும் அரும்பாடு­பட்­ட­வர் தமி­ழ­வேள். நான் சமூ­கத்­திற்­கா­கத் தொண்டு செய்­யும் ஆர்­வமே அவ­ரைப் பார்த்து­ வந்­ததுதான்," என்­றார் அவர்.

தமி­ழ­வேளை நேர­டி­யா­கக் கண்டு, அவ­ரது முயற்­சி­க­ளுக்கு தொண்­ட­ரா­கப் பணி­யாற்றி, அவ­ருக்கு உதவி பல செய்­துள்ள திரு தியா­க­ரா­ஜன், தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பா­ணி­யின் பிறந்­த­நாள் ஆண்­டு­தோ­றும் கொண்­டா­டப்­பட வேண்­டிய ஒன்று என்­றார்.

"அவ­ரது வாழ்க்கை வர­லாறு நவீன சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொ­ழி­யின் வர­லாற்­று­டன் இணைந்த ஒன்று. அதை அடுத்­தத் தலை­மு­றை­யி­னர் அறிந்­தி­ட­வேண்­டும்," என்று அவர் சொன்­னார்.

தமிழ் முரசு உட்­பட பல பத்­தி­ரி­கை­களை நிறு­வி­யது, தமி­ழர் பிரதி­நிதித்­துவ சபை, தமி­ழர் சீர்­திருத்­தச் சங்­கம் ஆகிய அமைப்பு­களை நிறு­வி­யது, தமிழ்க் கல்­வித் துறையை அன்­றைய மலா­யா பல்கலைக்­க­ழ­கத்­தில் அமைக்க சேவை புரிந்­தது, இந்­தி­யர்­களை சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மைப் பெற ஊக்­கு­வித்­தது, கல்­வி­யி­லும் வேலை­யி­லும் இந்­தி­யர்­கள் முன்­னேற வேண்­டும் என்று உந்­து­தல் அளித்­தது என்று தமி­ழ­வேள் ஆற்­றிய பங்கு அளப்­ப­ரி­யவை என்று தெரி­வித்­தார் திரு தியா­க­ரா­ஜன்.

தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பாணி 1903ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 20ஆம் தேதி தமி­ழ­கத்­தில் பிறந்து 1924ஆம் ஆண்டு வாழ்­வா­தா­ரம் தேடி சிங்­கப்­பூர் வந்­தார். தமது சீர்­தி­ருத்­தக் கொள்­கை­க­ளா­லும் சமூக அக்கறையா­லும் அவர் பல வழி­களில் சிங்­கப்­பூர் இந்­தி­யச் சமூ­கத்­திற்­குச் சேவை­யாற்­றி­யுள்­ளார்.

தமது 71ஆம் வய­தில் 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி அவர் மறைந்­தார்.

"ஆண்­டு­தோ­றும் அவ­ரது நினைவு நாளை­யும் பிறந்­த­நா­ளை­யும் கடந்த பல ஆண்­டு­க­ளாக தமி­ழ­வேள் நற்­பணி மன்­றத்­தின் சார்­பில் கொண்­டா­டி­ வ­ரு­கி­றோம். இவ்­வாண்டு கொவிட் சூழ­லால் முந்­தைய ஆண்­டு­கள் போல பெரிய நிகழ்ச்­சியையோ நட­வ­டிக்­கையையோ செய்­ய­ மு­டி­ய­வில்லை என்­றா­லும் மிட்­டாய் பகிர்ந்து மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை என்­னால் முடிந்த அளவு செய்­ய­வேண்­டும் என்று நினைத்­தேன்," என்­றார் அவர்.

நாரா­யண மி‌‌‌‌‌ஷன் தாதிமை இல்­லத்­தின் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு உணவு வழங்கி கொண்­டா­டு­வது, இலக்­கிய நிகழ்ச்­சி­கள், சமூக சேவை நட­வ­டிக்­கை­கள் போன்­றவை தமி­ழ­வேள் நற்­பணி மன்­றம் கடந்த ஆண்­டு­களில் தமி­ழ­வேள் பிறந்­த­நா­ளை­யும் நினைவு­நா­ளை­யும் ஒட்டி நடத்­திய நிகழ்ச்­சி­கள்.

"எனக்கு உடல்­ந­லக்­கு­றை­வு ஏற்பட்டுள்­ளது. சிகிச்­சைக்­குப் பின் ஓய்­வாக இருக்­க­வேண்­டும் என்­றா­லும் இன்று கொஞ்­சம் நேர­மா­வது இதைச் செய்­தால்­தான் எனக்கு மன­நி­றைவு," என்­றார் அவர்.

"எனக்கு 80 வய­தா­கி­விட்­டது. தமி­ழ­வே­ளு­டன் பணி­யாற்­றிய தள­பதி­க­ளின் தலை­முறை மறைந்­து­வரும் நிலை­யில், அவ­ரது புக­ழைப் பாட­வும் அவ­ரது பணியை அறி­ய­வும் சமூ­கத்­தி­னர் முன்­வ­ர­வேண்­டும்," என்­றார் அவர்.