பிளாஸ்டிக் கழிவுகளுக்கு முடிவுகட்டக் கூடிய உலக முயற்சியில் இனி சிங்கப்பூர் மக்களும் ஒன்றுசேரலாம். இதற்கான புதிய திட்டம் ஒன்று நேற்று தொடங்கப்பட்டது.
'கிளீன்4சேஞ்ச்' என்னும் அத்திட்டம் மறுசுழற்சி மீதான மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது. மேலும் சமூகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் முயற்சிகளை இது ஊக்குவிக்கும்.
இதற்காக தூய்மை நடவடிக்கைகள், சமூக நிகழ்வுகள், பயிலகங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து திட்டம் இயங்கும். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட லாப நோக்கற்ற அனைத்துல நட
வடிக்கையின் கீழ் திட்டம் செயல்
படுத்தப்படும்.
'பிளாஸ்டிக் கழிவுக்கு முடிவுகட்டும் கூட்டணி' என்று பொருள்படும் அந்நடவடிக்கையின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஜேக்கப் டுவர் பேசுகையில் சிங்கப்பூரின் பசுமைத் திட்டத்திற்குக் கைகொடுக்கும் பொருட்டு புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஷ் ஃபூ, சிங்கப்பூர் தனது மறுசுழற்சி விகிதத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்னும் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
"சிறிய நாடு என்பதால் குறைந்த அளவிலேயே பிளாஸ்டிக் கழிவு இருக்கும். மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் இவற்றை சிக்கனமாகக் கையாள்வதற்குத் தேவைான உள்கட்டமைப்பும் அதற்கான தீர்வுகளும் சிங்கப்பூரில் போதுமானதாக இல்லை.
"அடுத்ததாக, மறுசுழற்சி மீதும் வளங்களைப் பாதுகாப்பது தொடர் பாகவும் மக்கள் கொண்டிருக்கும் மனப்போக்கில் மாற்றம் தேவைப் படுகிறது.
"இருப்பினும் இதுபோன்ற பிரச் சினைகளுக்குத் தீர்வு காண சிங்கப்பூர் பணியாற்றி வருகிறது," என்றார் திருவாட்டி ஃபூ.

