ஜூரோங் துறைமுகத்தில் விபத்து; மலேசிய ஊழியர் காயம்

ஜூரோங் துறைமுகத்தில் விபத்து; மலேசிய ஊழியர் காயம்

1 mins read
84a49b50-9ff8-492e-86da-00ce3153709a
'வாட்ஸ்அப்' வழியாக உலா வந்த படங்களில் ஒருவர் ரத்தக் காயத்துடன் கிடப்பதையும் அவரைச் சுற்றி தரையில் எஃகு கம்பிகளையும் காண முடிந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

கப்பலிலிருந்து பொருள்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 45 வயது ஆடவர் காயம் அடைந்துள்ளார். எண் 37 ஜூரோங் போர்ட் ரோட்டில் இருக்கும் கலனிலிருந்து கடந்த திங்கட்கிழமை அவர் பொருள்களை இறக்கிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்த மலேசிய ஊழியர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மனிதவள அமைச்சு இன்று (ஏப்ரல் 21) வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிட்டது.

அவர் ஜூரோங் போர்ட் நிறுவனத்தின் ஊழியர் என அமைச்சு தெரிவித்தது.

இது ஒரு சிறிய வேலையிட விபத்து என சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தபோதும், ஊழியரின் நிறுவனம் கருத்துரைக்க மறுத்துவிட்டது.

'வாட்ஸ்அப்' வழியாக உலா வந்த படங்களில் ஒருவர் ரத்தக் காயத்துடன் கிடப்பதையும் அவரைச் சுற்றி தரையில் எஃகு கம்பிகளையும் காண முடிந்தது.

சம்பவத்தின் தொடர்பில் மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்