அமரர் லீ குவான் இயூவின் உயில்களைக் கையாண்டதன் தொடர்பில் வழக்கறிஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை

அமரர் லீ குவான் இயூவின் உயில்களைக் கையாண்டதன் தொடர்பில் வழக்கறிஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை

1 mins read
d27c06d0-4621-4f1a-8fb3-0e0f0178b200
அமரர் லீ குவான் இயூவின் உயில்களைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பிலான புகார்களின் பேரில் திருவாட்டி குவா கிம் லி ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூவின் உயில்களைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பிலான புகார்களின் பேரில் திருவாட்டி குவா கிம் லி (படம்) ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்கிறார். திரு லீ குடும்பத்தாரிடையேயான சச்சரவுகளின் அண்மைய நிலைப்பாடு இது.

திருவாட்டி குவாவின் நடத்தை பற்றி திரு லீ சியன் யாங், டாக்டர் லீ வெய் லிங் ஆகிய இருவரும் பதிவு செய்த இரண்டு கூடுதல் புகார்களை முறையாக விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 21) ஆணையிட்டது. இவ்விருவரும் அந்தச் சொத்து தொடர்பான விருப்ப ஆவணத்தை நிறைவேற்ற உரிமை கொண்டவர்கள்.

திரு லீ குவான் இயூவின் இளைய இரு பிள்ளைகளும் தாங்கள் திருவாட்டி குவாவுக்கு எதிராகப் பதிவு செய்த நான்கு புகார்களில் ஒன்றை மட்டும் விசாரிக்க எடுத்த வழக்கறிஞர்கள் சங்கத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ததையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

(மேல் விவரம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில்)

குறிப்புச் சொற்கள்