அறக்கொடை நிகழ்ச்சியுடன் அன்னையர் தினத்தைக் கொண்டாடும் மசெக மகளிர் அணி

அறக்கொடை நிகழ்ச்சியுடன் அன்னையர் தினத்தைக் கொண்டாடும் மசெக மகளிர் அணி

2 mins read
2b391d98-0389-4227-877e-019ea8688196
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள 10 தாதிமை இல்­லங்­க­ளுக்கு நிதி திரட்­டும் அதே வேளை­யில் அன்­னை­யர் தினத்­தைக் கொண்­டா­டு­வ­தற்­காக, அடுத்த மாதம் 8ஆம் தேதி இணை­யம்­வழி நடை­பெ­ற­வி­ருக்­கும் அறக்­கொடை நிகழ்ச்சி ஒன்­றில் மக்­கள் செயல் கட்­சி­யின் (மசெக) மக­ளிர் அணி­யைச் சேர்ந்த சில உறுப்­பினர்­கள் கலந்­து­கொள்ள உள்­ள­னர்.

இந்த நிகழ்ச்­சி­யில் பாட­வுள்­ள­வர்­களில் மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ­வும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா­வும் அடங்­கு­வர் என்று செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் போ லி சான் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­தார். அமைச்­சர் டியோ, மசெக மக­ளிர் அணித் தலை­வ­ரா­க­வும் அமைச்­சர் இந்­தி­ராணி அதன் துணைத் தலை­வரா­கவும் உள்­ள­னர்.

வசந்­தம் கலை­ஞர் ஷேரன் ஷோபனா வாசு­தே­வன் உள்­ளிட்ட உள்­ளூர் கலை­ஞர்­கள் சில­ரும் அமைச்­சர்­க­ளு­டன் சேர்ந்து நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­வர்.

மசெ­க­வின் ஃபேஸ்புக் பக்­கம் மற்­றும் யூடி­யூப் ஒளி­வ­ழி­யில் மே 8ஆம் தேதி பிற்­ப­கல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நேர­டி­யாக இந்நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கும்.

இந்த அறக்­கொடை நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யும் திரு­மதி போ, நிகழ்ச்­சி­யில் $200,000 நன்­கொடை இலக்கை எட்ட மசெக மக­ளிர் அணி அதன் சமூ­கப் பங்­கா­ளி­கள் மற்­றும் கட்­சித் தொண்­டர்­க­ளு­டன் சேர்ந்து பணி­யாற்­றும் என்று கூறி­னார். மூத்த குடி­மக்­களுக்­கான 'தோங் டெக்' இல்­லம் இந்­நி­கழ்ச்­சி­யின் பய­னா­ளர்­களில் அடங்­கும்.

இந்த ஆண்டு சிங்­கப்­பூர் மக­ளி­ரைக் கொண்­டா­டும் ஆண்­டாக அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தைச் சுட்­டிய திரு­மதி போ, சமு­தா­யத்­திற்கு மக­ளி­ரின் பங்­க­ளிப்­புக்கு நன்­றி­கூற இந்த அறக்­கொடை நிகழ்ச்சி நோக்கம் கொண்­டி­ருப்­ப­தா­கச் சொன்­னார்.

மக­ளி­ரைப் பாதிக்­கும் விவ­கா­ரங்­க­ளைத் தான் மறு­ஆய்வு செய்­ய­ இ­ருப்­ப­தாக அர­சாங்­கம் கடந்த ஆண்டு அறி­வித்­தி­ருந்­தது.

அந்த மறு­ஆய்­வின் ஒரு முக்கிய அங்­க­மாக 'சிங்­கப்­பூர் மக­ளி­ரின் மேம்­பாடு பற்­றிய உரை­யா­டல்­கள்' என்று அழைக்­கப்­படும் கலந்து­ரை­யா­டல் தொடர் இடம்­பெ­று­கிறது. அத்­தொ­டர் கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் தொடங்­கப்­பட்­டது.