அபாயத்தை எதிர்நோக்கும் சதுப்புநிலம், கடற்பாசி பகுதிகள்

அபாயத்தை எதிர்நோக்கும் சதுப்புநிலம், கடற்பாசி பகுதிகள்

2 mins read
64971afd-0bcb-4fb7-8c97-53168ba1f304
-

உயர்ந்து வரும் கடல்­ நீர்மட்­டம், மனி­தர்­கள் வாழும் இடங்­க­ளைப் பாதிப்­ப­தோடு நிறுத்­தி­வி­டு­வதில்லை. சதுப்­பு­நி­லங்­க­ளை­யும் கடற்பாசி பகுதிக­ளை­யும் அது பாதிக்­கிறது.

இந்தப் பகுதிகள் பாதிப்­படைந்­தால், பரு­வ­நிலை மாற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் அவற்­றின் ஆற்­ற­லும் பாதிப்­ப­டை­யக்­கூ­டும் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் இயற்கை சார்ந்த பரு­வ­நிலை தீர்­வு­க­ளுக்­கான நிலை­யத்­தைச் சேர்ந்த டாக்­டர் ஸெங் யிவென் கூறி­யுள்­ளார்.

பரு­வ­நிலை மாற்­றம் குறித்த ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் இணை­யக் கருத்­த­ரங்­கில் நேற்று பேசிய அவர், சதுப்­பி­நி­லங்­களும் கடற்பாசி பகுதி­களும் இயற்­கை­யி­லேயே சூழ­லுக்­கேற்ப தங்­களை மாற்­றிக்­கொள்­ளும் ஆற்­றல் கொண்­டவை. கடல்­நீர் மட்­டம் உய­ரும்­போது தீவின் உள்­ப­கு­திக்­குள் அவற்­றால் நகர முடி­யும்.

எனி­னும், அத்­த­கைய வசிப்­பிடங்­க­ளுக்­குப் பின்­னால் உள்ள நிலத்­தில் கட்­டு­மா­னப் பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்­போது, அந்த வசிப்­பி­டங்­கள் தீவின் உள்­ப­கு­திக்­குள் நக­ரு­வ­தில் தடை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

உயர்ந்­து­வ­ரும் கடல்­நீர் மட்­டத்­தைச் சதுப்­பு­நி­லங்­க­ளால் சமா­ளிக்க முடி­யுமா என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் பரு­வ­நிலை மாற்­றப் பிரி­வின் ஆசி­ரி­யர் டேவிட் ஃபொகார்ட்டி கேட்ட கேள்­விக்கு டாக்­டர் ஸெங் இவ்­வாறு பதி­ல் அளித்­தார்.

மோச­மான வானி­லை­யில் இருந்து கரை­யோ­ரப் பகு­தி­க­ளைப் பாது­காக்­கும் ஆற்­ற­லைச் சதுப்­பு­நி­லங்­கள் கொண்­டுள்­ளன. எனவே பரு­வ­நிலை மாற்­றம் ஏற்­ப­டுத்­தும் பாதிப்­பு­களை மட்­டுப்­ப­டுத்­து­வ­தில் சதுப்­பு­நி­லங்­க­ளுக்கு முக்­கிய பங்கு உண்டு என்று டாக்­டர் ஸெங் விவ­ரித்­தார்.

மீன்­பி­டிக்­கும் இடங்­க­ளை­யும் சதுப்­பு­நி­லங்­கள் பாது­காக்­கின்­றன. இத­னால் உணவு உற்­பத்­தி­யின் மீதும் மனி­தர்­க­ளின் வாழ்­வின் மீதும் தாக்­கம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­றார் அவர்.

எனவே பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை இப்போதே தொடங்க வேண்டும் என்று கருத்தரங்கில் நிபுணர்கள் வலியுறுத்தினர்.