மூன்றில் ஒரு மாணவர் டிரேஸ்டுகெதரை பள்ளியில் பெற்றுக்கொண்டுள்ளனர்

மூன்றில் ஒரு மாணவர் டிரேஸ்டுகெதரை பள்ளியில் பெற்றுக்கொண்டுள்ளனர்

1 mins read
62fa8e73-7788-46f2-b0e6-649f70bcdee1
-

தொடக்­கப்­பள்­ளி­கள், உயர்­நி­லைப்­பள்­ளி­கள், தொடக்­கக் கல்­லூ­ரி­கள், மில்­லே­னியா கல்­விக் கழ­கம் ஆகி­ய­வற்­றில் பயி­லும் ஏறத்­தாழ 130,000 மாண­வர்­கள் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­களை தங்­கள் பள்­ளி­களில் பெற்­றுக்­கொள்ள விண்­ணப்­பம் செய்த­னர்.

டிரேஸ்­டு­கெ­தர் சாத­னத்தை இன்­னும் பெற்­றுக்­கொள்­ளாத மாண­வர்­கள் அடுத்த மாத இறு­திக்­குள் அவற்­றைத் தங்­கள் பள்­ளி­யில் பெற விண்­ணப்­பிக்­க­லாம் என்று கடந்த மாதம் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­க­ளைப் பள்­ளி­யில் பெற விண்­ணப்­பம் செய்­தி­ருந்த மாண­வர்­கள் அனை­வ­ரும் அதற்­கான கால­க்கெ­டு­வுக்­குள் சாத­னங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் கல்வி அமைச்சு கூறி­யது.

டிரேஸ்­டு­கெ­தர் திட்­டத்­தில் பங்­கேற்­கும் 90 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­களில் இந்த மாண­வர்­களும் அடங்­கு­வர்.

சிங்­கப்­பூ­ரெங்­கும் உள்ள கடைத்­தொ­கு­தி­கள், உண­வ­கங்­கள் போன்ற இடங்­க­ளுக்­குச் செல்­ப­வர்­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைப் பதிவு செய்ய டிரேஸ்­டு­கெ­தர் சாத­னத்தை மட்­டுமே பயன்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி டிரேஸ்­டு­கெ­தர் சாத­னம் இல்­லாத, டிரேஸ்­டு­கெ­தர் செய­லியை இன்­னும் பதி­வி­றக்­கம் செய்­யாத மாண­வர்­க­ளுக்கு பள்­ளி­களில் அனு­மதி மறுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வகுப்­பில் இருக்­கும்­போது வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளின்­போது கைபே­சி­யைப் பயன்­ப­டுத்த முடி­யா­த­தால் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னத்­தைப் பள்­ளிக்­குக் கொண்டு செல்­லும்­படி மாண­வர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.