சிங்-கப்-பூர் உணவு முகவைப் பணியாளர்மீது குற்றச்சாட்டு

சிங்-கப்-பூர் உணவு முகவைப் பணியாளர்மீது குற்றச்சாட்டு

2 mins read
5e553981-cee0-48b3-99f6-6c893719548a
சிங்­கப்­பூர் உணவு முகவை­ தலைமை இயக்­கு­ந­ரின் தனிப்­பட்ட உத­வி­யா­ளர் நூராயின் ஜூப்லி (வலது), அவரது கணவர் கைருல் அன்வார் ஸக்காரியா. படங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்­கப்­பூர் உணவு முகவை தலைமை இயக்­கு­ந­ரின் தனிப்­பட்ட உத­வி­யா­ளர் மீது அரசாங்க ரக­சி­யச் சட்­டத்­தின்­கீழ் நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டது. கடந்த ஆண்டு 'சர்க்­கியூட் பிரேக்­கர்' எனப்­படும் கொவிட்-19 நோய்ப் ­ப­ர­வல் முறி­ய­டிப்பு காலத்­தின்­போது பள்­ளி­கள் மூடு­வது தொடர்­பான தக­வல்

க­ளைக் கசி­ய­விட்­ட­தன் தொடர்­பில் அவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது.

நூரா­யின் ஜூப்லி எனும் 38 வயது மாது மீது தவ­றான தொடர்பு தக­வல் என இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் பதிவு செய்­யப்­பட்­டன. இதே வாரத்­தில் பதி­வான அத்­த­கைய இரண்­டா­வது வழக்கு இது.

அவ­ரது கண­வர் கைருல்

அன்­­வார் ஸக்­கா­ரியா, 39, மீது அத்­த­கைய ஒரு குற்­றச்­சாட்­டும் தவ­றான தொடர்பு தக­வ­லுக்­காக ஒரு குற்­றச்­சாட்டும் பதி­வா­னது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகி­ய­வற்­றின் கூட்டு ஊடக அறிக்கை வரை­வி­லி­ருந்து அந்­தத் தக­வல் எடுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

பள்­ளி­கள், உயர் கல்­விக் கழ­கங்­களில் முழுக்க முழுக்க இல்ல அடிப்­ப­டை­யி­லான கற்­றல் திட்­டம் நடப்­புக்கு வரு­வது, பாலர்­பள்­ளி­கள் மற்­றும் மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் மூடப்­ப­டு­வது குறித்த தக­வல்­கள் அந்த வரை­வில் இருந்­தன.

ரக­சி­யத் தக­வல் என வகைப்­

ப­டுத்­தப்­பட்ட அதனை தலைமை இயக்­கு­ந­ரின் மின்­னஞ்­சல் பெட்­டகத்லிதி­ருந்து எடுத்­து, அதி­கா­ர­பூர்­வ­மாக தக­வல் வெளி­யி­டப்­ப­டு

­வ­தற்கு முன்­பா­கவே, தம் கண­வ­ருக்கு அனுப்­பி­னார் நூரா­யின்.

இது குறித்து கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் 3ஆம் தேதி புகார் பெற்­ற­தாக நேற்று முன்­தி­னம் இரவு போலிஸ் தெரி­வித்­தது.

தனது கணி­னித் திரை­யி­ல் இருந்து இந்­தத் தக­வ­லைப் புகைப்­ப­ட­மாக எடுத்து நூரா­யின் தம் கண­வ­ருக்கு அனுப்­பி­னார். அவ­ரது கண­வர் அந்­தப் படத்தை 13 பேர் கொண்ட வாட்­சப் குழு­வில் தம் நண்­பர்­க­ளுக்கு அனுப்­பி­னார்.

கண­வர் கேட்­ட­தற்­கி­ணங்க, கொவிட்-19 நோய்ப்­ ப­ர­வல் முறி­

ய­டிப்பு கால­கட்­டத்­தில் தொடர்ந்து செயல்­படும் அத்­தி­யாவ­சி­யச் சேவை­க­ளின் பட்­டி­ய­லை­யும் புகைப்­ப­டம் எடுத்து அனுப்­பி­னார் நூரா­யின்.

அவர்­கள் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால், ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டுக்­கும் $2,000 வரை அப­ரா­தம், ஈராண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில் போலிஸ் விசா­ரணை தொடங்­கி­யது முதல் வேலை­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக விடு­விக்­கப்­பட்­டார் நூரா­யின்.

இவர்­கள் அனுப்­பிய தக­வ­லைப் பெற்ற, மற்­ற­வர்­க­ளுக்கு அனுப்­பிய 16 பேருக்கு எழுத்­துப்­பூர்வ எச்­ச­ரிக்கை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக போலிஸ் தெரி­வித்­தது.