ஜூரோங் துறைமுகத்தில் விபத்து; மலேசிய ஊழியர் காயம்

ஜூரோங் துறைமுகத்தில் விபத்து; மலேசிய ஊழியர் காயம்

1 mins read
9a13c9e9-8a03-49d8-81c1-ad186f59c5e9
-

கப்­ப­லி­லி­ருந்து பொருள்­களை இறக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த 45 வயது ஆட­வர் காய­ம் அடைந்­துள்ளார். எண் 37 ஜூரோங் போர்ட் ரோட்­டில் இருக்­கும் கல­னி­லி­ருந்து கடந்த திங்­கட்­கி­ழமை அவர் பொருள்­களை இறக்­கிக்­கொண்­டி­ருந்­த­போது இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

அந்த மலே­சிய ஊழி­யர் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட செய்தி அறிக்கை குறிப்­பிட்­டது.

அவர் ஜூரோங் போர்ட் நிறு­வ­னத்­தின் ஊழி­யர் என அமைச்சு தெரி­வித்­தது.

இது ஒரு சிறிய வேலை­யிட விபத்து என சிங்­கப்­பூர் கடல்­துறை மற்­றும் துறை­முக ஆணை­யம் தெரி­வித்­த­போ­தும், ஊழி­ய­ரின் நிறு­வ­னம் கருத்­து­ரைக்க மறுத்­து­விட்­டது.

வாட்­சப் வழி­யாக உலா வந்த படங்­களில் ஒரு­வர் ரத்­தக் காயத்­து­டன் கிடப்­ப­தையும் அவ­ரைச் சுற்றி தரை­யில் எஃகு கம்­பி­க­ளை­யும் காண முடிந்­தது.

சம்­ப­வத்­தின் தொடர்­பில் மனி­த­வள அமைச்சு விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்