கொவிட்-19 தடுப்பூசி தரும் பாதுகாப்பு 18 மாதங்கள் வரை நீடிக்கலாம்

கொவிட்-19 தடுப்பூசி தரும் பாதுகாப்பு 18 மாதங்கள் வரை நீடிக்கலாம்

2 mins read
b1cf130c-5cb9-4d45-9016-b9b771c4e639
-

கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­தோர் கொரோனா கிரு­மிக்கு எதி­ராக 300 நாள்­க­ளுக்­கும் மேலாக வலு­வான நோயெ­திர்ப்­புச் சக்­தி­யைக் கொண்­டுள்­ள­னர்.

எனி­னும், சமூ­கத்­தி­லும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளி­லும் குண­ம­டைந்­தோ­ரி­டம் தேசிய தொற்­று­நோய் தடுப்பு நிலை­யம் நடத்­திய ஆய்­வு­களில், சில­ரி­டையே கொவிட்-19 நோயெ­திர்ப்­பு சக்தி அளவு காலப்­போக்­கில் குறைந்­து­வி­டு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

எனவே, தொற்­றி­லி­ருந்து குண­

ம­டைந்த ஒரு­வரை பின்­னர் மீண்­டும் கிரு­மி ­தொற்­றும் சாத்­தியம் இருப்­ப­தாக சுகா­தார அமைச்­சின் மருத்­து­வச் சேவைப் பிரிவு இயக்­கு­ந­ரான இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக் நேற்று தெரி­வித்தார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்த வெளி­நாட்டு ஊழி­யர்­களில் பல­ரும் கொவிட்-19 கிருமி தொற்றி 300 நாள் மைல்­கல்லை எட்­டி­யுள்­ளதை அவர் சுட்­டி­னார்.

"மீண்­டும் கிருமித்தொற்­று

அபா­யம் ஏற்­ப­டு­வதை அணுக்­க­

மா­கக் கண்­கா­ணிக்­கத் தொடங்­கு­வ­தற்கு இது சரி­யான தரு­ணம். தனி­ந­பர்­க­ளி­டையே மீண்­டும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டும்­போது அதைக் கண்­கா­ணிக்க நாங்­கள் தொடர்ந்து விழிப்­பு­டன் இருப்­போம்," என்­றார் பேரா­சி­ரி­யர் மாக்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட தனி­ந­பர்­க­ளைப் பொறுத்­த­வரை, 15 முதல் 18 மாதங்­கள் வரை அவர்­கள் கிரு­மித்­தொற்­றில் இருந்து பாது­காக்­கப்­ப­ட­லாம் என்று நம்­பப்­

ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். எனி­னும், அதற்கு அப்­பாற்­பட்டு தடுப்­பூசி எந்த அள­வுக்கு பாது­காப்­பைத் தரும் என்­ப­தில் நிச்­ச­ய­மில்லை. ஏற்­கெ­னவே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு கூடு­தல் தடுப்­பூசி தேவைப்­ப­டுமா என்­பது குறித்து அதி­கா­ரி­கள் ஆராய்­வர் என்று பேரா­சி­ரி­யர் மாக் சொன்­னார்.

"தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்த ஊழி­யர்­க­ளுக்கு எப்­படி காலப்­போக்­கில் பாது­காப்பு குறை­கிறோ, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கும் இதே நிலை பொருந்­தும்," என்று அவர் கூறி­னார். தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட தனி­ந­பர்­க­ளி­டம் அதி­கா­ரி­கள் பரி­சோ­தனை நடத்­து­வர் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"அவர்­க­ளது நோயெ­திர்ப்­பு சக்தி குறைந்து வரு­வது தெரி­ய­வந்­தால், அத்­த­கை­யோ­ருக்­குத் தடுப்­பூசி போடு­வ­தற்­கான திட்­டத்­தைத் தொடங்க அது சரி­யான நேர­மாக இருக்­கும்" என்று அவர் விவ­ரித்­தார்.