சிங்கப்பூர்-ஹாங்காங் இருவழிப் பயண ஏற்பாடு தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை

சிங்கப்பூர்-ஹாங்காங் இருவழிப் பயண ஏற்பாடு தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை

2 mins read
25d8079d-0932-4b53-ab2b-ef5f211d0f34
-

சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடை­யி­லான இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு மீண்­டும் தொடங்­கும் தேதி இன்­னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இரு­வ­ழிப் பய­ணம் தொடர்­பான அறி­விப்பு நேற்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் அறி­விப்பு செய்ய எடுக்­கப்­பட்­டி­ருந்த முடிவை இரு­நா­டு­களும் கைவிட்­டன.

அறி­விப்பை சிங்­கப்­பூர் ரத்து செய்­த­தாக புளூம்­பெர்க் அறிக்கை தெரி­வித்­தது.

இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு தொடர்­பாக சிங்­கப்­பூ­ரும் ஹாங்­காங்­கும் மிக அணுக்­க­மாக கலந்­தா­லோ­சித்து வந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் போக்­கு­ர­வ­ரத்து அமைச்­சின்

செய்­தித்­தொ­டர்­பா­ளர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடை­யி­லான இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் தொடங்க இருந்­தது.

"இரு­வ­ழிப் பயண ஏற்­பாட்டை மீண்­டும் தொடங்­கும் தேதி இன்­னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை. ஆனால் நாங்­கள் தயா­ரா­ன­தும் தேதியை முடிவு செய்­வோம். கூடிய விரை­வில் முடிவு எடுக்­கப்­படும் என நம்­பு­கி­றோம்," என்று செய்­தித்­தொ­டர்­பா­ளர் தெரி­வித்­தார்.

ஹாங்­காங்­கில் கொவிட்-19 பாதிப்பு மோச­ம­டைந்­த­தைத் தொடர்ந்து, சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு இவ்­வாண்­டுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

ஹாங்­காங்­கில் கொரோனா பாதிப்பு குறைந்து வரு­வ­தால் அண்­மை­யில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­க­ளின் மூலம் இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு கூடிய விரை­வில் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

இரு­வ­ழிப் பயண ஏற்­பாட்டை மீண்­டும் தொடங்க கூடிய விரை­வில் இணக்­கம் காணப்­படும் என இம்­மா­தம் 13ஆம் தேதி­யன்று ஹாங்­காங் தலைமை நிர்­வாகி கேரி லாம் தெரி­வித்­தி­ருந்­தார்.

பய­ணி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தும் முறை இல்­லாது சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடை­யி­லான இரு­வ­ழிப் பயண ஏற்­பாட்டை மீண்­டும் தொடங்­கு­வது தொடர்­பான விவ­ரங்­கள் உறுதி செய்­யப்­ப­டு­வ­தாக இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று போக்­கு­வ­ரத்து அமைச்சு ஓங் யி காங் தெரி­வித்­தார்.

மற்ற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் சிங்­கப்­பூ­ரி­லும் ஹாங்­காங்­கில் கொரோ­னா­வால் மிகப் பெரிய அள­வி­லான பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை

கொவிட்-19 கிரு­மித்­தொற்று தலை­தூக்­கி­ய­தி­லி­ருந்து ஹாங்­காங்­கில் 11,704 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கொரோனா கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் 30 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

ஆனால் இரு நாடு­களும் சிறிய நாடு­கள் என்­ப­தால் ஒவ்­வொரு குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­க­ளி­லும் பலர் வசிக்­கும் சூழல் உள்­ளது.

சில­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டா­லும் அது மற்­ற­வர்­க­ளுக்கு மிக எளி­தில் பர­வும் சாத்­தி­யம் அதி­கம் உள்­ளது.

எனவே, எல்­லை­களை மீண்­டும் திறக்­கும் திட்­டம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இதே போன்ற பிரச்சினைகளை மற்ற நாடுகளும் எதிர்கொள்கின்றன.

பல மாதங்கள் காத்திருப்புக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாடு கடந்த திங்கட்கிழமையன்று தொடங்கியது.

ஆனால் மறுநாளே ஆக்லந்து அனைத்துலக விமான நிலையத்தைச் சேர்ந்த ஊழியருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.