பூச்சி ஒழிப்புப் பிரிவு நிறுவனங்களின் மின்னிலக்கத் தீர்வுகளுக்கு நிதி ஆதரவு

பூச்சி ஒழிப்புப் பிரிவு நிறுவனங்களின் மின்னிலக்கத் தீர்வுகளுக்கு நிதி ஆதரவு

2 mins read
4e4b30f2-b7fc-4e12-86b0-564ed1229c7c
-

தொல்­லை­கொ­டுக்­கும் பூச்­சி­களை நிர்­வ­கிக்­கும் துறை­யில் உள்ள சிறிய, நடுத்­தர அள­வி­லான நிறு­

வ­னங்­கள் தங்­க­ளது சேவை தொடர்­பான மின்­னி­லக்­கத் தீர்­வு­களை உரு­வாக்க நிதி உத­வி­

பெற்­றுக்­கொள்­ள­லாம். புத்­து­யி­ரூட்­டப்­பட்ட சுற்­றுச்­சூ­ழல் சேவை­கள் தொழில்­துறை மின்­னி­லக்­கத் திட்­டத்­தின் அங்­க­மாக இந்த உதவி அமை­கிறது.

இந்­தத் திட்­டத்­தில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட, ஏற்­கெ­னவே அனு­ம­திக்­கப்­பட்ட மின்­னி­லக்­கத் தீர்­வு­க­ளுக்கு சுற்­றுச்­சூ­ழல் சேவை­கள் துறைக்­கான உற்­பத்­தித்­தி­றன் தீர்­வு­கள் நிதி­யு­தவி பெறப்­ப­ட­லாம்.

ரேபன் பார்க்­கில் உள்ள தொழில்­துறை மற்­றும் வர்த்­தக வச­தி­கள் நிர்­வாக நிறு­வ­னத்தை நேற்று

பார்­வை­யிட்­ட­போது நீடித்த நிலைத்­தன்மை மற்­றும் சுற்­றுச்­சூ­ழல் மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஏமி கோர் இத­னைத் தெரி­வித்­தார்.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக முக்­கி­ய­மான இடத்­தைப் பிடித்­

தி­ருக்­கும் சுற்­றுச்­சூ­ழல் சேவை­கள் துறைக்கு கூடு­தல் தேவை நில­வு ­வ­தா­லும் மனி­த­வள கட்­டுப்­பா­டுப் பிரச்­சி­னை­கள் இருப்­ப­தா­லும் அந்­தத் துறை­யின் உற்­பத்­தித்­தி­றன் அதி­க­ரிக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­றார் அவர்.

சுற்­றுச்­சூ­ழல் சேவை­கள் துறை­யில் பணி­யாற்­று­வோ­ரின் சரா­சரி வயது அதி­கம் என்று குறிப்­பிட்ட அவர், துப்­பு­ர­வா­ளர்­க­ளின் சரா­சரி வயது 60 என்­றும் கழிவு நிர்­வா­கத் துறை­யில் பணி­யாற்­று­வோ­ரின் சரா­சரி வயது 49 என்­றும் குறிப்­பிட்­டார்.

புத்­து­யி­ரூட்­டப்­பட்ட சுற்­றுச்­சூழல் சேவை­கள் தொழில்­துறை மின்­னி­லக்­கத் திட்­டத்­தின்­கீழ் மூன்று துணைப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் புதிய, மேம்­பட்ட தொழில்­நுட்­பத்தை தங்­க­ளது சேவை­யில் பயன்­ப­டுத்த ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றன.

கழிவு நிர்­வா­கத்­தில் 'பிளாக்­செ­யின்' தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வது, நிறு­வ­னங்­க­ளின் செயல்­பா­டு­களை ஒருங்­கி­ணைக்க தரவு பகுப்­பாய்­வைப் பயன்­ப­டுத்­து­வது போன்­ற­வை­யும் இதில் அடங்­கும் என தேசிய சுற்­றுப்­புற வாரி­யம், தக­வல் தொடர்பு, ஊடக மேம்­பாட்டு ஆனை­யம் ஆகி­யவை நேற்று வெளி­யிட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.