தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லஞ்சம் தொடர்பான புகார்கள் ஐந்தாண்டு காணாத சரிவு

2 mins read
58f1d003-67f2-4031-8634-ff529941a6c0
-

லஞ்ச ஊழல் தொடர்­பான புகார்­கள் கடந்த ஆண்டு ஐந்­தாண்டு காணாத சரி­வைக் கண்­ட­தாக லஞ்ச ஊழல் புலன் விசா­ர­ணைப் பிரிவு (சிபி­ஐபி) தனது வரு­டாந்­திர புள்­ளி­வி­வர அறிக்­கை­யில் தெரி­வித்து உள்­ளது.

கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு இடையே கடந்த ஆண்­டில் லஞ்ச ஊழல் தொடர்­பாக 239 புகார்­கள் செய்­யப்­பட்­ட­தாக அந்த அறிக்கை சுட்­டி­யது.

இந்த எண்­ணிக்கை 2019ல் 350 ஆக இருந்­தது. இது கிட்­டத்­தட்ட 31 விழுக்­காடு சரிவு. 2018ஆம் ஆண்­டில் செய்­யப்­பட்ட புகார்­க­ளின் எண்­ணிக்கை 358.

நோய்ப் பர­வல் கார­ண­மாக தனி­யார் துறை­யில் பொரு­ளி­யல் நட­

வ­டிக்­கைகள் பெரும் சரிவு ஏற்­பட்­டது புகார்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­த­தற்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்று அறிக்கை கூறி­யது.

கடந்த ஆண்டு பெறப்­பட்ட 239ல் 81 புகார்­கள் விசா­ரிக்­கப்­பட வேண்­டிய புதிய புகார்­க­ளாக சிபி­ஐபி பதிவு செய்­தது.

இது 2019ஆம் ஆண்­டில் 119 ஆக இருந்­தது.

அதே­நே­ரம், புகார்­க­ளின் அடிப்­

ப­டை­யில் விசா­ர­ணைக்­குப் பின் தண்­டிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விகி­தம் 97 விழுக்­காடு என்று கடந்த ஆண்­டும் தொடர்ந்­தது. திரும்­பப் பெறப்­பட்ட புகார்­க­ளின் எண்­ணிக்கை இதில் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

கொவிட்-19 கொள்­ளை­நேய் சவால்­க­ளுக்கு இடை­யி­லும் குைறந்த அளவு லஞ்ச நில­வ­ரத்தை சிங்­கப்­பூர் தொடர்ந்து கடைப்­பி­டித்து வரு­வ­தாக சிபி­ஐபி இயக்­கு­நர் டெனில் டாங் கூறி­னார்.

அத்­து­டன், லஞ்ச ஊழல் ஆகக் குறைந்த அள­வில் நில­வும் உலக நாடு­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் தொடர்ந்து இருந்து வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

லஞ்ச ஊழ­லுக்கு இட­ம­ளிக்­காத உறு­திப்­பா­டும் தொடர் கண்­கா­ணிப்­பும் இதற்­கான காரணங்­கள் என்­றார் திரு டெனிஸ்.

கடந்த ஆண்­டில் தண்­டிக்­கப்­பட்ட லஞ்ச ஊழல் வழக்­கு­களில் போலிஸ் அதி­காரி மகேந்­தி­ரன் செல்­வ­ராஜு, 32, என்­ப­வர் தொடர்­பா­ன­தும் ஒன்று.

விசா­ர­ணை­யில் இருந்த இரு பெண்­க­ளி­டம் பாலி­யல் சேவையை லஞ்­ச­மா­கப் பெற்­ற­தற்­காக ஈராண்டு சிறைத் தண்­டனை அவ­ருக்கு விதிக்­கப்­பட்­டது.

இவர்­களில் ஒரு பெண் வழக்­கி­லி­ருந்து தப்­பிக்­க­வும் மற்­றொரு பெண்­ணின் முத­லா­ளி­யி­டம் அந்­தப் பெண்­ணுக்­குச் சாத­க­மான பதி­லைத் தர­வும் பாலி­யல் சேவையை அந்த அதி­காரி லஞ்­ச­மா­கப் பெற்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

மேலும் அந்­தப் பெண்­க­ளின் அனு­ம­தி­யின்றி அவர்­க­ளின் சொந்த காணொ­ளிப் படங்­க­ளை­யும் மற்ற தக­வல்­க­ளை­யும் மகேந்­தி­ரன் தமது சொந்த தக­வல் சேமிப்­புச் சாத­னத்­தில் நகல் எடுத்­தி­ருந்­தார்.

மின்­னி­லக்க தட­ய­வி­யல் பயன்­பாடு மற்­றும் நம்­ப­கத்­தன்­மை­யைக் கணிக்­கும் கரு­வி­கள் ஆகி­ய­வற்­றின் உத­வி­யோடு மகேந்­தி­ர­னின் குற்­றங்­களும் லஞ்ச ஊழல் நோக்­க­மும் கண்­ட­றி­யப்­பட்­ட­தாக சிபி­ஐபி கூறி­யது.

இந்த வழக்கு ஊட­கங்­களில் வெளி­யா­ன­தால் பொது­மக்­க­ளின் விழிப்­பு­ணர்வு அதி­க­ரிக்க அது உத­வி­யது.

மேலும் இதே­போன்ற சம்­ப­வங்­களில் மற்­ற­வர்­கள் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தால் அவர்­க­ளி­டம் இருந்து தனக்கு புகார்­கள் கிடைக்க அச்­சம்­ப­வம் உத­வி­ய­தா­க­வும் சிபி­ஐபி தெரி­வித்துள்­ளது.

2019ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 31 விழுக்காடு குறைவான புகார்கள்