கம்போங் கிளாமில் புதிதாக 'சிறு அருங்காட்சியகங்கள்'

கம்போங் கிளாமில் புதிதாக 'சிறு அருங்காட்சியகங்கள்'

1 mins read
9dbffb1e-56e7-4512-a903-93cc40b0bc91
பானக் கடை ஒன்றின் முதலாளியான முகம்மது அஸ்கார், 51, தே தாரே தயாரிக்கும் முறையை விளக்கினார். அவரது கடைக்கு முன்னால் அருங்காட்சிப் பெட்டி. படம்: திமத்தி டேவிட் -

கம்­போங் கிளாம் வட்­டா­ரத்­தில் நெடுங்­கா­ல­மாக இயங்கி வரும் கடை­க­ளின் முன்­னால் ஏழு புதிய சிறு அருங்­காட்­சி­யங்­கள் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

சாப்­பி­டு­வ­தற்­கும் பொழுது போக்கவும் அங்கு செல்­வோர் நேற்று முதல் பாரம்­ப­ரியப் பொருட்­கள் வைக்­கப்­பட்ட சிறிய அருங்­காட்­சிப் பெட்­டி­க­ளைக் காண முடி­யும்.

40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு பயன்­ப­டுத்­தப்­பட்ட கத்­த­ரிக்­கோல், வாச­னைத் திர­வி­யங்­கள் விற்­

ப­னை­யா­ள­ரின் பழைய புத்­த­கப் பக்­கம் போன்­றவை அங்கு காட்­சிக்கு வைக்­கப்­பட்ட அரும் பொருட்­க­ளுள் அடங்­கும்.

தேர்ந்து எடுக்­கப்­பட்ட கடை முத­லா­ளி­க­ளு­டன் இணைந்து மேற்­கொள்­ளப்­பட்ட இந்நடவடிக்கை, முப்­ப­தாண்டு கால­மாக இயங்­கும் உள்­ளூர் கடை­க­ளின் வர­லாற்றை விவ­ரிக்­கும் தேசிய மர­பு­டைமை வாரி­யத்­தின் முயற்­சி­க­ளின் ஒரு பகுதி.