சிங்கப்பூர் சிறைச் சேவைப் பிரிவு புதிதாக ஏற்படுத்தி உள்ள ஒருங்கிணைந்த சேவை மையமான சிலாராங் பார்க் காம்ப்ளக்ஸில் நவீன தொழில்நுட்பம் நிறுவப்பட்டு உள்ளது. சிறை வளாகங்களுக்கு இடையிலும் வளாகங்களின் இதர பகுதிகளிலும் நடமாடும் கைதிகளுடன் சிறை அதிகாரிகள் உடன் செல்வது வழங்ககம்.
ஆனால் இனி அதற்கு அவசியம் இருக்காது. ஒரு வளாகத்தில் இருந்து மற்றொரு வளாகத்திற்குள் சுழல் கதவு வழியாக நுழையும் கைதிகள் தங்களது முக அடையாளத்தையும் கைப்பட்டைக் கருவியையும் ஸ்கேன் செய்தால் போதுமானது.
வளாகங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட கண்காணிப்புக் கருவி, முக அடையாளத் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியன காரணமாக இந்தப் புதிய வசதி சாத்தியமாகி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் முழுமையாகச் செயல்படத் தொடங்கிய சிலாராங் பார்க் காம்ப்ளக்ஸை சட்ட, உள்துறை அமைச்சர்
கா.சண்முகம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
போதைப்பொருள் குற்றவாளி
களுக்கான மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதனுள் அமைக்கப்பட்டு உள்ளன.
சிங்கப்பூரிலேயே முக அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் சிறை வளாகம் சிலாராங் பார்க் காம்ப்ளக்ஸ் என்று சிங்கப்பூர் சிறைத்துறை சேவை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றவாளி
களுக்கான மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் உளவியல் அடிப்
படையிலான சீர்திருத்தப் பயிற்சித் திட்டங்களிலும் திறன்வளர்ப்புப் பயிற்சிகளிலும் பங்கேற்பர். குடும்ப ஆதரவையும் சமயச் சேவைகளையும் அவர்கள் பெறுவர்.
தற்போது புதிதாக நிறுவப்பட்டுள்ள முக அடையாளத் தொழில்நுட்ப வசதி சிறைத் துறை சேவையின் 'காவலர்களற்ற கைதிகள்' என்னும் உத்தியின் ஒரு பகுதி. சிறை வளாக செயல்முறை ஆற்றலை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த உத்தி. அத்துடன் கைதிகள் மறுவாழ்வின் மீது சிறை அதிகாரிகள் கவனம் செலுத் தவும் இது வகை செய்கிறது.
இந்த முக அடையாளத் தொழில்நுட்பம், நுழைவு அனுமதிக்குப் பயன்படுவதோடு சிறைக்குள் அடைக்கப்பட்ட கைதிகளைக் கணக்கெடுக்கவும் உறுதுணை புரியும். மேலும், அனுமதிக்கப்படாத இடங்களில் நுழையும் கைதிகளை அடையாளம் காணவும் இது உதவும் என்று சிங்கப்பூர் சிறைச் சேவை தெரிவித்துள்ளது.

