உணவக பெண் ஊழியருக்கு சிறை

உணவக பெண் ஊழியருக்கு சிறை

1 mins read
94825a60-bb55-464f-8ff4-4fa7b631c692
-

பாதுகாப்பு இடைவெளி

தூதுவர் ஒருவரை சைக்கி ளால் மோதி காயப்படுத்திய உணவுக்கடை ஊழியருக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபாம் தி மாய் தாவோ, 43, என்னும் அந்தப் பெண் மூர்க்கத்தன மாக நடந்துகொண்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேலாங் சிராய் சந்தையில் சம்பவம் நடைபெற்றதாக நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சந்தைக்குள் நுழைவோரின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்த தடுப்பு போடப்பட்டு இருந்தது. கடை முதலாளி ஒருவரிடம் தாவோ பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட தூதுவர் எந்த ஒரு பரிவர்த் தனையிலும் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தார். பின்னர் கடைக்காரருக்குப் பணம் தருவதைக் கண்ட தூதுவர் அதனைத் தடுக்க முயன்றார். அப்போது அந்தப் பெண்ணின் மின்சார சைக்கிளை மறித்து தூதுவர் நின்றிருந்தார். அவரது காலில் சைக்கிளை அந்தப் பெண் ஏற்றினார். அங்கிருந்து நகர முயன்ற தூதுவர் மீது மீண்டும் சைக்கிளை ஏற்றிய தோடு அதனை தொடர்ந்து செய்ததால் அந்த ஆடவருக்கு காயம் ஏற்பட்டது.