பல அமைச்சர்களுக்குப் புதிய, கூடுதல் பொறுப்புகள்

பல அமைச்சர்களுக்குப் புதிய, கூடுதல் பொறுப்புகள்

2 mins read
cbbe61f4-48dc-4a24-b4c5-829135b18e68
-

சிங்­கப்­பூர் அமைச்­ச­ரவை மே 15 முதல் மாற்­றம் காண்­கிறது. புதிய அமைச்­ச­ர­வை­யில் பல அமைச்­சர்­களும் அர­சி­யல் பத­வி­களை வகிப்­போ­ரும் புதிய அல்­லது கூடு­தல் பொறுப்­பு­களை ஏற்க உள்ளதாக நேற்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.

திரு­வாட்டி ஜோச­ஃபின் டியோ தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­கி­றார்.

'அறி­வார்ந்த நகர்' செயல்­திட்­டத்­திற்குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரா­க­வும் 'சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு முக­வை'க்­குப் பொறுப்பு அமைச்­ச­ரா­க­வும் இவர் பணி­யாற்­று­வார்.

இந்­தப் பொறுப்­பு­களை இவர் அமைச்­சர்­கள் முறையே டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், திரு ஈஸ்­வ­ரன் ஆகி­யோ­ரி­டம் இருந்து ஏற்­கி­றார்.

திரு எட்­வின் டோங் மக்­கள் கழ­கத்­தின் துணைத் தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­கிறார். இந்­தப் பொறுப்பை திரு சான் சுன் சிங்­கி­டம் இருந்து அவர் ஏற்­கி­றார்.

திரு ஓங் யி காங் புதிய சுகா­தார அமைச்­ச­ரா­க செயலாற்றுவார். மூப்­ப­டை­யும் பிரச்­சி­னை­களுக்­கும் பொறுப்­பேற்­பார்.

திரு­வாட்டி சிம் ஆன், தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­ச­ரா­கத் தொட­ர்வார். தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் பத­வி­யைக் கைவி­டு­வார். வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­ச­ராக இவர் நிய­மிக்­கப்­படு­கி­றார்.

திரு சீ ஹொங் டாட், போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­ச­ராக தொடர்வார். என்­டி­யு­சி­யில் பொறுப்­பேற்­கி­றார்.

டாக்­டர் கோ போ கூன் மனி­த­வள மூத்த துணை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­கி­றார். இவர் சுகா­தார மூத்த துணை அமைச்­ச­ரா­கத் தொடர்ந்து பணி­யாற்­று­வார். டாக்­டர் கோ என்­டி­யுசி துணைத் தலை­மைச் செய­லா­ளர் பத­வி­யைக் கைவிட்­டு­விட்டு முழு நேர அர­சாங்­கத்­துக்­குத் திரும்­பு­வார்.

திரு டான் கியாட் ஹாவ் தொடர்பு, தக­வல் துணை அமைச்­ச­ரா­கப் பொறுப்பு ஏற்­பார். தேசிய வளர்ச்சி துணை அமைச்­ச­ரா­கத் தொடர்ந்து பதவி வகிப்­பார். என்­றா­லும் பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் துணை அமைச்­சர் என்ற பத­வியை இவர் கைவி­டு­வார்.

திரு­வாட்டி ரஹாயு மக்­ஸாம் சுகா­தார அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ள­ராக சேவையாற்று வார். தொடர்பு, தக­வல் அமைச்­சுக்­கான நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் என்ற கூடு­தல் பொறுப்­பை­யும் அவர் ஏற்­பார்.