நான்காம் தலைமுறைத் தலைவர்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்பு

நான்காம் தலைமுறைத் தலைவர்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்பு

1 mins read
174f12e8-7e54-43e2-b475-6775455162ef
-

அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் கார­ண­மாக நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் தங்­க­ளு­டைய புதிய பத­வி­களில் ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­பட்டு ஒரே குழு­வா­கத் தங்­கள் பிணைப்­பைப் பலப்­ப­டுத்த முடி­யும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து உள்­ளார்.

பெரும்­பா­லான நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் பல­த­ரப்­பட்ட துறை­களில் ஏற்­கெ­னவே அனு­பவங்­க­ளைத் திரட்டி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்டார் பிர­த­மர்.

புதிய மாற்­றங்­கள் கார­ண­மாக அவர்­கள் புதிய அனு­ப­வங்­க­ளை­யும் ஈடு­பா­டு­க­ளை­யும் பெற வழி ஏற்­படும் என்றும் பிரதமர் திரு லீ தெரிவித்தார்.

கொவிட்-19 சூழ்­நிலை இப்­போது நிலைப்­பட்டு இருந்­தா­லும் நாம் இன்­ன­மும் பொதுச் சுகா­தார, பொரு­ளி­யல் நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கு­கி­றோம் என்­ப­தால் விரை­வாக அவர்­கள் செயல்­பட வேண்டி இருக்­கிறது என்று நேற்று நடந்த மெய்­நி­கர் செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் பிர­த­மர் திரு லீ கூறி­னார்.

"அமைச்­ச­ரவை ஒரே குழு­வாகச் சேர்ந்து செயல்­பட வேண்டி இருக்­கிறது. அமைச்­சர்­கள் ஒரு குழு­வின் அங்­க­மா­கப் பாடு­ப­டு­கி­றார்­கள். அவர்­கள் பங்கை ஆற்­று­கிறார்­கள் என்­பது மக்­க­ளுக்­குத் தெரிய வேண்­டும்.

"அதே­நே­ரத்­தில் ஒரு பிரச்­சினை எழும்­போது அதை முழு­மை­யா­கக் கையா­ளு­வ­தற்­குத் தலை­வர்­கள் தயாராக இருக்க வேண்­டும்," என்று பிர­த­மர் திரு லீ செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறி­னார்.