'பருவநிலை இலக்குகளை எட்ட தொழில்நுட்பப் பயன்பாடு' 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் லீ உரை

'பருவநிலை இலக்குகளை எட்ட தொழில்நுட்பப் பயன்பாடு' 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் லீ உரை

3 mins read
b95aeaf3-798b-4b22-a9ab-f03bbe1722e1
-

வளங்­களை அணு­கு­வ­தற்­கான வச­தி­கள் இல்­லாத சிறிய நாடாக இருந்­தா­லும் புத்­தாக்­கத்­தின் வழி­யாக நாட்­டின் பரு­வ­நிலை தொடர்­பான இலக்­கு­களை அடைய சிங்­கப்­பூர் முயற்சி எடுக்­கும் என பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அழைப்பு விடுத்த பரு­வ­நிலை தொடர்­பான தலை­வர்­கள்

மெய்நி­கர் மாநாட்­டின் இரண்­டா­வது நாளான நேற்று அவர் உரை­யா­டி­னார். கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­க­வும் பரு­வ­நிலை மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப மாற்­றிக்­கொள்­ள­வும் தொழில்­நுட்­பத்தை சிங்­கப்­பூர் பயன்­ப­டுத்துவதா­கப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் புதுப்­பிக்­கப்­ப­டக்­கூ­டிய ஆற்­றல் வளங்­கள் எல்­லைக்­குட்­பட்­டவை என்­றா­லும் 2025ஆம் ஆண்­டுக்­குள் நாட்­டின் சூரிய சக்தி மின்­னாற்­றல் உற்­பத்­தியை நான்கு மடங்­காக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருப்­

ப­தைக் குறிப்­பிட்­டார் பிர­த­மர். உல­கின் ஆகப் பெரிய மிதக்­கும் சூரிய சக்தி மின்­னாற்­றல் உற்­பத்­தித் திட்­டம் ஆண்­டு­தோ­றும் 33,000 டன் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைச் சரிக்­கட்­டும் என்­றும் அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

தெங்கெ நீர்த்­தேக்­கத்­தில் மிதக்­கும் சூரிய சக்தி மின்­க­லம் பயன்­பாட்­டுக்கு வரும்­போது சாலை

களி­லி­ருந்து 7,000 கார்­க­ளின் பயன்­பாட்டை நீக்­கு­வ­தற்கு ஈடான

கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் தடுக்­கப்­படும் என்று முன்பு பிர­த­மர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

நெரி­சல் மிகுந்த நக­ரச் சூழ­லில் வெப்­ப­நிலை உயர்­வின் தாக்­கம் குறித்­தும் சிங்­கப்­பூர் அக்­கறை கொண்­டுள்­ள­தாக பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

"இத­னைக் குறைப்­ப­தற்­காக பரு­வ­கா­லத்­துக்கு ஏற்ற நகர வடி­வ­மைப்பை கணி­னி­யைப் பயன்­ப­டுத்தி வடி­வ­மைக்­கி­றோம், கட்­ட­டங்

களுக்கு சிறப்­பான குளிர்ச்­சி­யூட்­டும் சாயம் பூசி பரி­சோ­திக்­கி­றோம், ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மரங்­களை நடு­கி­றோம்," என்­றும் அவர் குறிப்­பிட்­டார். கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் நோக்­கில் நாடு­கள் அதிக முயற்­சி­கள் மேற்­கொள்ள ஊக்­கு­விக்­கும் விதத்­தில் இரு தினங்­கள் நடை­பெற்ற மெய்நிகர் மாநாட்­டில் பங்­கேற்ற 40 உல­கத் தலை­வர்­க­ளுள் திரு லீயும் ஒரு­வர்.

'பரு­வ­நிலை தொடர்­பான புத்­தாக்­கத்­தைக் கட்­ட­விழ்ப்­பது' எனும் பொருள்­படும் தலைப்­பில் கூட்­டத்­தில் பேசிய திரு லீ, சிங்­கப்­பூர் சிறிய நாடாக இருந்­த­போ­தும் அனைத்­து­லக பரு­வ­நிலை செயல்­திட்­டங்­க­ளுக்­கான தனது பங்­கைத் தொடர்ந்து ஆற்­றி­யது என்­றார்.

தாம் அங்­கம் வகிக்­கும் 'பரு­வ­நிலை மாற்­றத்­துக்­கான ஐக்­கிய நாடு­கள் பணிச்­சட்ட' அமைப்­பில் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைப்­பது தொடர்­பான நீண்­ட­கால உத்­தி­யைச் சமர்ப்­பித்த முதல் 20 நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று.

2030ஆம் ஆண்­டின் உச்­ச­பட்ச கரியமில வாயு வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்­டுக்­குள் பாதி­

யா­கக் குறைக்க சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது. இந்த நூற்­றாண்­டின் பிற்­பா­தி­யில் கூடிய விரை­வில் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தை முற்­றி­லும் இல்­லா­மல் செய்­வ­தை­யும் கவ­னத்­தில் கொண்­டுள்­ளது சிங்­கப்­பூர். சிங்கப்பூரில் முன்பு அறி­விக்­கப்­பட்ட நீடித்து நிலைத்­தி­ருக்­கும் வளர்ச்­சிக்­கான சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030 பற்­றி­யும் திரு லீ குறிப்­பிட்­டார்.

ஒரு பொரு­ளி­யல் மைய­மாக சிங்­கப்­பூர் எவ்­வாறு அனைத்­து­லக கரி­ய­மில வாயு வெளி­யேற்­றக் குறைப்­புக்கு உதவ முடி­யும் என்­பதை சிங்­கப்­பூ­ரின் பசுமை முத­லீட்­டுத் திட்­டம் உட்­பட பல திட்­டங்­க­ளைக் குறிப்­பிட்­டுப் பிர­த­மர் விளக்­கி­னார். மாநாட்டை ஏற்­பாடு செய்த அதி­பர் பைட­னுக்கு நன்றி தெரி­வித்த பிர­த­மர், நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய எதிர்­கா­லத்தை உரு­வாக்க அமெ­ரிக்கா, மற்ற நாடு­

க­ளு­டன் இணைந்து சிங்­கப்­பூர் செயல்­படும் என்­றும் அவர் கூறி­னார்.