குறைந்த ஊதிய ஊழியர்களுக்கு உதவ $4 மில்லியன் நிதி உதவி

குறைந்த ஊதிய ஊழியர்களுக்கு உதவ $4 மில்லியன் நிதி உதவி

2 mins read
404fe206-0232-43c6-8d22-2e5e57f83a57
-

வர்த்­த­கம் சரி­வர நடக்­கா­த­தால் ஊழி­யர்­க­ளுக்கு ஊதி­யம் கொடுக்க இய­லாத நிலை­யில் இருக்­கும் நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த குறைந்த ஊதிய ஊழி­யர்­க­ளுக்கு உதவ நேற்று $4 மில்­லி­யன் நிதி வழங்கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஒரு மில்­லி­யன் வெள்­ளி­யை­யும் அர­சாங்­கம் 3 மில்­லி­யன் வெள்­ளி­யை­யும் அந்த நிதி­யில் சேர்த்­துள்­ளன.

அத்­த­கைய குறைந்த ஊதிய ஊழி­யர்­கள் புதிய வேலை­யைத் தேடும்­போ­தும் சமு­தாய உத­விக்­கா­கக் காத்­தி­ருக்­கும்­போ­தும்

உத­வு­வ­தற்­காக கடந்த 2017ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட குறு­கிய கால நிவா­ரண நிதி­யில் இந்­தத் தொகை சேர்க்­கப்­படும்.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் முதல் தேதி­லி­ருந்து இத்­த­கைய ஊழி­யர்­கள் இரு மாத ஊதி­யம் வரை­யி­லான நிதி ஆத­ர­வைப் (அதி­க­பட்­சம் $4,600) பெற முடிந்­தது.

சம்­மே­ள­னத்­தின் 40வது ஆண்டு நிறைவை ஒட்டி ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்­

தோ­சா­வில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் ராபர்ட் யப் இந்­தச் செய்­தி­யைத் தெரி­வித்­தார். "வேலை­யின் எதிர்­கா­லத்தை மறு­வ­டி­வ­மைத்­தல்: விரைந்து செயல்­படும் முத­லா­ளி­கள், மீள்­தன்­மை­கொண்ட ஊழி­யர்­கள்' என்ற கருப்­பொ­ரு­ளைக் கொண்ட அந்த நிகழ்ச்­சி­யில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் பங்­கேற்­றார்.

கொவிட்-19க்குப் பிந்­திய சூழ­லில் வாழ்­நாள் முழு­வ­தும் ஊழி­யர்­க­ளால் வேலை­யில் இருக்க முடி­வது, நிறு­வ­னங்­கள் நீடித்து நிலைத்­தி­ருப்­பது போன்­ற­வற்றை விரி­வு­ப­டுத்த முத­லா­ளி­கள், ஊழி­யர்­க­ளி­டையே வலு­வான பிணைப்பு இருப்­பது அவ­சி­யம் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

ஊழி­யர்­களை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் தொழில்­துறை உரு­மாற்ற வரை­ப­டத் திட்­டத்­தின் மூலம் நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­

க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கின்­றன என்­றார் அவர்.

வேலை மறு­வ­டி­வ­மைப்பு, மாற்­றுத் திறன் உரு­வாக்­கம், பல்­

க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான பயிற்சி போன்­ற­வற்­றி­லும் கவ­னம் செலுத்­தப்­படும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.