உள்ளூரில் இருவர், விடுதிவாசி ஒருவர் உட்பட 39 பேருக்குத் தொற்று

உள்ளூரில் இருவர், விடுதிவாசி ஒருவர் உட்பட 39 பேருக்குத் தொற்று

1 mins read
af922afd-ca11-4c86-be12-1a79786ac25d
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று 39 பேருக்கு தொற்று பதி­வா­னதை அடுத்து, இங்கு கொவிட்-19ஆல் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 60,943 ஆகி­யுள்­ளது.

அவர்­களில் இரு­வர் உள்­ளூர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள், ஒருவர் தங்­கு­வி­டு­தி­வாசி என சுகா­தார அமைச்­சின அறிக்கை தெரி­வித்­தது. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த பிறகு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­

க­ளி­டையே நேற்று கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட 36 பேரில் 16 பேர் நிரந்­த­ர­வா­சி­கள், அறு­வர் இல்­லப் பணிப்­பெண்­கள்.

நேற்று முன்­தி­னம் உள்­ளூ­ரில் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒரு­வர் டைமென்­ஷன்ஸ் இன்­டர்­நே­ஷ­னல் காலே­ஜில் பயி­லும் 11 வயது மாண­வர், மற்­றொ­ரு­வர் 32 வய­தான வெளி­நாட்டு ஊழி­யர்.

அந்த 11 வய­துச் சிறு­வன் மாண­வர் அனு­மதி அட்­டை­யில் இருக்­கும் இந்­திய நாட்­ட­வர்.

பெற்­றோ­ருக்குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் சிறு­வன் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தான்.

விடு­தி­வா­சி­யான வெளி­நாட்டு ஊழி­யர் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­வர் என்று கூறப்பட்டது.