பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

1 mins read
708f6cd3-09e5-4a60-9cef-aa5ef4dc169d
-

சிங்­கப்­பூ­ரின் மூலா­தார பண­வீக்­கம் மார்ச் மாதத்­தி­லும் தொடர்ந்து மேம்­பட்­டது. சில்­லறை விற்­பனை, மின்­சா­ரம், எரி­வாயு, இதர பொருள்­

க­ளின் விலை­கள் குறைந்­த­து­டன் பல உயர் சேவைப் பிரி­வு­களில் பண­வீக்­கம் மேம்­பட்­டது.

தங்­கு­மி­டம், தனி­யார் சாலைப் போக்­கு­வ­ரத்­துச் செல­வு­கள் போன்­றவை தவிர்த்த மூலாதார பண­வீக்­கம், மார்ச் மாதத்­தில் கடந்த ஆண்டு அதே கால­கட்­டத்­தை­விட 0.5% அதி­க­ரித்­தது. பிப்­ர­வரி மாதத்­தில் அந்த அளவு 0.2 விழுக்­கா­டாக இருந்­தது. ஒட்­டு­மொத்த பண­வீக்­க­மும் மார்ச் மாதம் 1.3 விழுக்­கா­டாக அதி­க­ரித்­தது. பிப்­ர­வரி மாதத்­தில் அது 0.7 விழுக்­கா­டாக இருந்­தது.

ஊழியர் சந்தை நிலை­கள் மேம்­பட்டு வரு­வ­தா­லும் தனி­யார் பய­னீடு அதி­க­ரிப்­ப­தா­லும் உள்­நாட்டு விலை அழுத்­தங்­கள் கொஞ்­சம் கொஞ்­ச­மாக அதி­க­ரிக்­கும் என சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், வர்த்­தக, தொழில் அமைச்சு ஆகி­யவை நேற்று வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது. வரும் மாதங்­களில் மூலாதார பண­வீக்­கம் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று கூறப்­பட்­டா­லும் வர்த்­தகச் செல­வு­கள் கட்­டுப்­ப­டுத்­தப்பட்­டி­ருப்­ப­தால் இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் பண­வீக்­கம் வெகு­வாக அதி­க­ரிக்க வாய்ப்­பில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஊதிய வளர்ச்­சிக்கு வாய்ப்­பில்லை என்­றும் வர்த்­தக வாட­கை ­கள் குறை­வா­க இருக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தேவை­கள் கார­ண­மாக தனி­யார் போக்­கு

­வ­ரத்து, தங்­கு­மிட செல­வு­கள் தொடர்ந்து அதி­க­மா­க இருக்­கக்­கூ­டும் என்று அறிக்கை தெரி­வித்­தது. சரா­சரி மூலா­தார பண­வீக்­கம் 0 - 1% வரை­யும் சரா­சரி ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 0.5% - 1.5% வரை­யும் இருக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.