லாரி விபத்து: மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார்

லாரி விபத்து: மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார்

1 mins read
4e2609aa-f794-43ad-bd99-de7a0a97ba87
-

தீவு விரை­வுச்­சாலை ஓரத்­தில் நின்­றி­ருந்த 'டிப்­பர்' லாரி­யு­டன் வெளி­நாட்டு ஊழி­யர்­களை ஏற்­றிச் சென்ற லாரி மோதி­ய­தில் 33 வயது ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­ததை அடுத்து, மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட மற்­றும் ஓர் ஊழி­ய­ரும் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

கேர­ளா­வைச் சேர்ந்த 28 வயது திரு சுகு­ணன் சுதீஷ்­மன், தமக்கு ஏற்­பட்­டி­ருந்த காயங்­க­ளால் உயி­ரிழந்­த­தாக கூறப்­பட்­டது.

திரு சுகு­ண­னின் தாயார் சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­வ­தா­க­வும் அவ­ரு­டன் தொடர்­பில் இருந்து தேவை­யான உத­வியை நல்­கு­வ­தா­க­வும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நிலை­யம் அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டது.

மேலும், இல்­லப் பணிப்­பெண் வேலை­யில் உள்ள திரு சுகு­ணனின் தாயா­ரு­டன் 'இட்ஸ்­‌ரே­னிங்­ரேன்­கோட்ஸ்' என்ற லாப நோக்­க­மற்ற அமைப்­பின் ஆலோ­ச­கர் பேசி வரு­வ­தாக அமைப்­பின் தொண்­டூ­ழி­யர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

மகன் இறப்­ப­தற்கு முன் வியா­ழக்­கி­ழமை இரவு தாயார் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று பார்த்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

திரு சுகு­ண­னுக்­குத் திரு­ம­ண­மாகி 18 மாதக் குழந்தை ஒன்று உள்­ளது என்­றும் திரு சுகு­ணன் உயி­ரி­ழந்­தது அவ­ரின் மனை­விக்கு இன்­னும் தெரி­யாது என்­றும் கூறப்­பட்­டது. செவ்­வாய்க்­கி­ழமை காலை நடந்த விபத்தை அடுத்து மருத்­து­வ­ம­னை­யில் ஐந்து ஊழி­யர்­கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். ஒரு­வர் தீவிர சிகிச்­சைப் பிரி­வி­லி­ருந்து உயர் சார்­புப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

உட்­லண்ட்­சில் உள்ள வேலைத் தளத்­திற்கு லாரி­யில் இருந்த 17 ஊழி­யர்­களும் சென்­று­கொண்­டி­ருந்­த­போது விபத்து நேர்ந்தது.

தம் குழந்­தை­யு­டன்

திரு சுகு­ணன்.

படம்: ItsRainingRaincoats