$1 மில்லியன் கடன் மோசடி செய்தவருக்குச் சிறை

$1 மில்லியன் கடன் மோசடி செய்தவருக்குச் சிறை

2 mins read
3768fec7-816d-476f-aaf4-b5a801648899
-

மாது ஒரு­வர் இன்­னொ­ரு­வர் துணை­யு­டன் சொத்து மனை உரி­மை­யா­ளர்­கள் என்று கூறி ஏமாற்றி, $1 மில்­லி­ய­னுக்கு மேலான தொகை­யைக் கட­னா­கப் பெற்ற மோச­டிக் குற்­றத்­திற்­காக நேற்று நான்கு ஆண்­டு­கள் மூன்று மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

குற்­றம் புரிந்த கால­கட்­டத்­தில் 48 வயது ஃபூ வெய் லீ என்ற அந்த மாது, ஒரு கணக்­கா­ள­ராக இருந்­த­தா­க­வும் மற்­றும் ஒரு மோச­டிக் குற்­றத்­தில் பங்­கு­பெற்­றி­ருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

அந்த மோச­டிச் சம்­ப­வத்­தில் நிதி நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து $230,000க்கும் மேலான தொகையை ஃபூ ஏமாற்­றிப் பெற்­றுக்­கொண்­டார்.

ஃபூவின் காத­ல­ராக இருந்த 25 வயது கோர் சூன் கியட், கோரின் தாயார் 54 வயது சிம் சியொக் குவான், கோரின் நண்­பன் யோ ஹுவா பியாவ் ஆகி­யோர் ஃபூ புரிந்த குற்­றங்­க­ளுக்­குத் துணை­யாக இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவர்­கள் மீதான வழக்­கு­கள் இன்­னும் நிலு­வை­யில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கோர், சிம் இரு­வ­ரும் சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­குக் கடன் வழங்­கும் நிதி நிறு­வ­னங்­க­ளுக்­குப் பொய் விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பித்­துப் பணம் பெறும் திட்­டத்­தில், கடன் செயல்­மு­றை­களை நன்­க­றிந்த ஃபூவையும் சேர்த்­துக்­கொண்­ட­னர்.

யோவை­யும் ஒரு நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் என்று கூறித் தங்­க­ளது மோச­டிக் கும்­ப­லில் சேர்த்­துக்­கொண்­ட­னர்.

யோவின் போலி நிறு­வ­னத்­தில் வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் நடப்­ப­தாக நம்ப வைத்து இரண்டு நிதி நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து முதல் மோச­டித் தொகை­யைப் பெற்­ற­னர்.

ஆனால், சொத்து மனை உரி­மை­யா­ளர்­க­ளாக ஃபூவும் யோவும் தங்­க­ளைக் கூறிக்­கொண்டு மூன்­றா­வது நிறு­வ­னத்தை $1.1 மி. கட­னுக்­காக அணு­கி­ய­போது அனை­வ­ரும் சிக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.