வழக்கறிஞருக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டு மீட்பு

வழக்கறிஞருக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டு மீட்பு

1 mins read
b36ecc7d-65b1-4e37-bdc2-c3249e78bd5a
-

சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகத்தை ஏமாற்றியதாக வழக்கறிஞர் சர்பிரிந்தர் சிங் நரஞ்சன் சிங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மீட்டுக் கொள்ளப்பட்டது. அவர் குற்றமற்றவர் என்ற நிலையில் இக்குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்பட்டதால் 50 வயதுடைய சிங்கப்பூரரான திரு சிங் மீது மீண்டும் இதே குற்றச்சாட்டைச் சுமத்த முடியாது. திரு சிங் மேற்பார்வையில் தேவையான பயிற்சி பெற்றதாக சட்டத்துறை பட்டதாரி 28 வயது ஸ்ரீ மனிஷ் கல்ரா ஜித்தேந்தர் குமார் கல்ரா, கழகத்திற்குப் பொய்த் தகவல் அளித்திருந்தார். கழகத்திற்கு கல்ரா சமர்ப்பித்திருந்த கடிதத்தில் திரு சிங்கின் கையெழுத்து இருந்தது.

இந்நிலையில் திரு சிங்குக்கு எதிராக மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஐந்துக்கும் திரு சிங் வழக்கு கோரவுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.