கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸ் கட்டட நுழைவாயில் அருகே கூரைப்பகுதி விழுந்தது

கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸ் கட்டட நுழைவாயில் அருகே கூரைப்பகுதி விழுந்தது

1 mins read
835223cd-f52c-4728-b991-3b78bf42ab3c
மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டு இருந்த கூரைப் பலகையின் பெரிய  ஒரு பகுதி கழன்று கீழே விழுந்தது. படம்: சாவ்பாவ் வாசகர் -

பீச் ரோட்டில் இருக்கும் கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸ் கட்டடத்தின் நுழைவாயில் அருகே அலங்காரக் கூரைப்பகுதி நேற்று (ஏப்ரல் 23) மாலை கீழே விழுந்துவிட்டது.

மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டு இருந்த கூரைப் பலகையின் பெரிய ஒரு பகுதி கழன்று கீழே விழுந்துவிட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் பதிவேற்றப்பட்டது. திடீரென ஒரு பெரிய அலங்கார கூரைப் பகுதி விழுவதை அந்தக் காணொளி காட்டியது.