ஊழியர் தங்குவிடுதிகள்: அணுக்க கண்காணிப்பு தொடரட்டும்

ஊழியர் தங்குவிடுதிகள்: அணுக்க கண்காணிப்பு தொடரட்டும்

4 mins read
930ad887-a4cd-4bfb-9cfb-49d4ea4f1aa8
-

முரசொலி

சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தங்குவதற்காகவே அனைத்து வசதிகளுடன் தனிச்சிறப்பு விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. வெளியே செல்லவேண்டிய தேவை இல்லாமலேயே அனைத்து தேவைகளையும் வெளிநாட்டு ஊழியர்கள் நிறைவேற்றிக்கொள்வதற்கு அத்தகைய விடுதிகளில் நவீன வசதிகள் முழுமையாக இருக்கின்றன.

இருந்தாலும் அவற்றில் ஊழியர்கள் நெருக்கம் அதிகம். இதன் காரணமாகவும் இதர பல காரணங்களாலும் சென்ற ஆண்டில் கொவிட்-19 தொற்று அதிகம் பரவிய இடங்களில் இத்தகைய விடுதி கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

தொற்று சென்ற ஆண்டில் பூதாகரமாக பரவியபோது அதைக் கட்டுப்படுத்துவதில் உலகம் வியக் கும் வகையில் சிங்கப்பூர் நல்ல முன்னேற்றம் கண்டு வந்த ஒரு நேரத்தில், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கொரோனா தொற்று தாறுமாறாகப் பெருகி பெரும் அச்சத்தைக் கிளப்பிவிட்டது.

பல விடுதிகளும் சென்ற ஆண்டு ஏப்ரலில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. வேலைகள் நிறுத்தப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகள், அதிவேக நடவடிக்கைகள், மருத்து வக் கூடங்கள் என அரசாங்கம் இடைவிடாமல் எடுத்துவந்த கடுமைன, உறுதியான, அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக சிங்கப்பூரர்கள் நிம்மதி பெருமூச்சுவிடக்கூடிய அளவுக்கு கடந்த ஆகஸ்டில் ஓர் அறிவிப்பு வெளினது.

அதாவது, குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கட்டப்பட்டு உள்ள ஆறு விடுதிகளில் அமைந்திருக்கும் 17 புளோக்குகள் நீங்கலாக எல்லா விடுதிகளும் தொற்று இல்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த 17 புளோக்குகள், கிருமி தொற்றியோர் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாகச் செயல்பட்டன.

நிலை இப்படி மேம்பட்டதை அடுத்து கட்டுமானம், கடல் துறை, பதனீட்டுத் தொழில்துறை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஐவரில் நால்வர் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

வேலை பார்த்து பொருள் ஈட்டி தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பக்கூடிய சூழல் திரும்புவதைக் கண்டு ஊழியர்கள் நம்பிக்கையுடன் மகிழத் தொடங்கினர். அதேவேளையில், சிங்கப்பூரின் பொருளியல் மேம்பாட்டுக்குக் கைகொடுக்க காலம் கனிந்துவிட்டதாகவும் அவர்கள் ஊக்கம் அடைந்தனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் இருந்து கொவிட்-19 கிருமியை முற்றிலும் விரட்டி அடிக்க வேண்டும் என்பதே சென்ற ஆண்டில் சிங்கப்பூர் சந்தித்த மிகமுக்கிய இலக்காக இருந்தது. தங்குவிடுதி நிலவரங்கள் இப்போது எவ்வளவோ மேம்பட்டுள்ள போதிலும் அதிகாரிகள் இன்ன மும் அதே ஊக்கத்துடன் அத்தகைய விடுதிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

இதில் கொஞ்சம்கூட தொய்வு ஏற்பட அதிகாரிகள் இடம்கொடுப்பதில்லை.

'வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ்' என்ற வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் அண்மையில் சிலருக்குத் தொற்று தெரிய வந்ததை அடுத்து உடனடிக வெளிநாட்டு ஊழியர்களுக்கான பாதுகாப்புகள் கடுமைக்கப்படுகின்றன. உருமாறும் புதிய வகை கொவிட்-19 கிருமி ஏதேனும் அத்தகைய விடுதிகளில் இருந்து வெளியேறி சமூகத்தைத் தொற்றிவிட அனுமதித்துவிடக் கூடாது என்பது மிக முக்கியமானது.

உலகின் பல நாடுகளில் உருமாறிய கொவிட்-19 கிருமிகள் தலைகாட்டி 2வது அலையை ஏற்படுத்தி பெரும் மிரட்டலாகி வருகின்றன. அத்தகைய நாடுகளில் இந்தி இப்போது மிகவும் குறிப்பிடத்தக்க நாடாக ஆகி உள்ளது. ஆனால் அண்மையில் வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் விடுதியில் ஏற்பட்ட தொற்றுக்கும் இந்திவில் தலைதூக்கி இருக்கும் புதிய வகை கிருமிக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் அண்மைய வாரங்களில் உள்ளூர் தொற்று கூடுவதாகத் தெரியவந்துள்ளது. உலகில் புதிய வடிவில் கொவிட்-19 கிருமி தலை எடுப்பதை நினைக்கையில் இது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. புதிய உலக மிரட்டலோடு, உள்ளூர் தொற்றையும் மிக அணுக்கமாகக் கண்காணித்து வரவேண்டிய அவசர அவசியம் சிங்கப்பூருக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. புதிய வடிவில் தலை எடுக்கும் கொரோனா கிருமி அதிக வீரியத்துடன் வேகமாக பரவக்கூடியதாக இருக்கக்கூடும்.

தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்களை மீண்டும் தொற்றும் ஆற்றலும் உருமாறும் கிருமிக்கு இருக்கலாம். இப்படிப்பட்ட சூழல் ஏற்படும்போது மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டிய தேவையும் ஏற்படலாம்.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக இந்தி வுக்கு அண்மைய நாட்களில் சென்று வந்திருக்கும் நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள், குறுகிய கால பயணிகள் அனைவருக்கும் சிங்கப்பூருக்குள் வர அனுமதி இல்லை என்று அறிவிக்கப் பட்டு உள்ளது. அவர்கள் இடைவழிக சிங்கப்பூரில் தரை இறங்கி செல்ல இயலாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அணுக்க கண்காணிப்புகள் ஒருபுறம், எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகள் மறுபுறம். இவை போன்ற நடவடிக்கைகள் எல்லாம் மிகவும் முக்கியமானவை, அவசியமானவை என்பதில் ஐயமே இல்லை.

ஆனாலும் இவை எல்லாம் மக்களுக்குத் தானாகவே பாதுகாப்பை ஏற்படுத்தித் தருமா என்பதுதான் கேள்வி. நிச்சயம் பாதுகாப்பைத் தரும் என்று நம்பி இருப்பது விவேகமானதாக இருக்காது என்பதே உண்மை.

உலகம் கொவிட்-19 கிருமியை ஒழிக்க முடிமல் திண்டாடுகிறது. இதில் மேலும் ஓர் இடிக, பாதிப்பாக, ஆபத்தாக அதிக வீரியத்துடன் புதிய வடிவில் கொவிட்-19 மிரட்டுகிறது. இவை சிங்கப்பூரர்களுக்கு மேலும் சிலவற்றைக் கட்டாயமாக்குகின்றன.

மக்கள் இதுவரை இருந்துவந்துள்ளதைவிட இன்னும் கவனமாக இருந்துகொள்ளவேண்டும்;

அண்மைய காலத்தில் பழக்கப்படுத்திக்கொண்ட முகக்கவசம், கைகளைப் பலமுறை சுத்தமாக சோப்புப்போட்டு கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய வழமைகளை தொடர்ந்து இன்னும் முழுமைக அவர்கள் பின்பற்றிவர வேண்டும்;

சிங்கப்பூரர்கள் இப்படி நடந்துகொள்ளாமல் அலட்சியமாக இருந்து கொவிட்-19க்கு மீண்டும் இடம் கொடுத்துவிட்டால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இதுநாள்வரை எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகி, தோல்வி ஏற்பட்டுவிடும் என்பதை மக்கள் மறந்துவிடலாகாது.