கூரைப்பகுதி விழுந்தது

கூரைப்பகுதி விழுந்தது

1 mins read
efcc0af8-4fa3-4988-9b9f-fa047ba40005
-

பீச் ரோட்டில் இருக்கும் கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ் கட்டடத்தின் நுழைவாயில் அருகே அலங்காரக் கூரைப்பகுதி கீழே விழுந்துவிட்டது.

மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டு இருந்த கூரைப் பலகையின் ஒரு பெரிய பகுதி கழன்று கீழே விழுந்துவிட்டது. வெள்ளிக் கிழமை நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் பதிவேற்றப் பட்டது. திடீரென ஒரு பெரிய அலங்கார கூரைப் பகுதி விழுவதை அந்தக் காணொளி காட்டியது.