புதிதாக ஐந்து பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று

புதிதாக ஐந்து பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று

1 mins read
7b081cfd-53b3-4a1f-90d8-ebc2133c81f5
-

சிங்கப்பூரில் புதிதாக ஐந்து பேருக்கு உள்ளூரில் கொவிட்-19 கிருமி தொற்றியது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்களில் தங்குவிடுதிகளில் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

அந்த ஐவரும் முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள் என்றும் அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

அவர்களில் நான்கு பேர் ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 39 வயது இந்தோனீசிய ஆடவருடன் அணுக்கத் தொடர்பில் இருந்தவர்கள்.

அந்த இந்தோனீசிய ஆட வருக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த 18 பேருக்கும் கிருமித்தொற்று இருந்ததாகவும் அவர்களுக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. புதிதாக கிருமி தொற்றியோரையும் சேர்த்து கொவிட்-19 தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 60,966 ஆகியது.

கொரோனா தொற்று காரணமாக சிங்கப்பூரில் 30 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை சமூகத்தொற்றுக்கு ஆளானதாக தெரியவந்த மூன்று பேரில் இரண்டு பேர் ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் என்றும் மற்றொருவர் ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டு இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.