ஞாயிறு விடுமுறையில் நிரம்பி வழிந்த கடைத் தொகுதிகள்

ஞாயிறு விடுமுறை நாளான நேற்று லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசாவில் கூட்டம் அலை மோதி யது. இரு கடைத் தொகுதிகளிலும் நீண்ட வரிசையில் ஏராளமானோர் காத்திருந்தனர்.இருந்தாலும் கடைத் தொகுதி களில் நிலைமை கட்டுக்குள் இருந்தது.

இன்று மாலை 4.00 மணி அளவில் பெனின்சுலா பிளாசாவுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி யாளர்கள் சென்றபோது வெளியே பெருங்கூட்டம் காணப்பட்டது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நுழைய முயற்சி செய்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலிசார், கூட்டமாக நின்று கொண்டிருந்த சிலரை திருப்பி அனுப்பினர்.

பாதுகாவலர்களும் நுழைவு வாயிலில் தடுப்புகளைப் போட்டு அடைத்துவிட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் தோழிகளுடன் காத்திருந்த 37 வயது பணிப்பெண் ஒருவர், பாரம் பரிய உணவு வாங்குவதற்காக வாரயிறுதியில் தாம் இங்கு வருவது வழக்கம் என்றார்.
ஆனால் இப்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் அச்சமாக இருக்கிறது என்றார் அவர்.
லக்கி பிளாசாவிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. கடைத் தொகுதியில் நுழைந்தவர்களை பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் உன்னிப்பாகக் கண்காணித்தனர்.

‘ஒரு மீட்டர் இடைவெளி, ஒரு மீட்டர் இடைவெளி’ என்று தூதர் களில் சிலர் உரக்கக் குரல் கொடுத்தனர். வெளிநாட்டு ஊழியர்களிடம் மிகவும் பிரபலமான இரு கடைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 10ஆம் தேதி நுழைவுக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து கடைத் தொகுதி களில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!