A$43 மி; சிங்கப்பூரருக்கு ஆஸி. நீதிமன்றம் ஆணை

A$43 மி; சிங்கப்பூரருக்கு ஆஸி. நீதிமன்றம் ஆணை

1 mins read
d29e6247-14aa-48d4-b157-4a74c392bce2
-

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள த ஸ்டார் கோல்ட்­கோஸ்ட் சூதாட்­டக் கூடத்­தில் சூதாடி ஆஸ்­தி­ரே­லிய டாலர் 43 மில்­லி­யன் கடன்­பட்­ட­தா­கக் கூறப்­படும் சிங்­கப்­பூ­ர­ரான டாக்­டர் வோங் யிவ் சோய்க்கு ஆஸ்­தி­ரே­லிய நீதி­மன்­றம் வழக்­கில் முன்­னி­லை­யாக உத்­த­ர­விட்­டுள்­ளது. முன்­ன­தாக சிங்­கப்­பூர் சட்­டப்­படி அவர் அந்­தக் கடனை ஈடு­கட்ட வேண்­டி­ய­தில்லை என்று சிங்­கப்­பூர் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.

இந்த வழக்­குப் பற்றி கூறிய குவின்ஸ்­லாந்து உச்ச நீதி­மன்ற நீதி­பதி தாமஸ் பிராட்லி, "இந்த வழக்கை அவர் எதிர்­கொள்­வ­தால் அவ­ருக்கு எந்­த­வி­த­மான நியா­ய­மற்ற சுமையோ, பார­பட்­சமோ, இழப்போ ஏற்­ப­டாது. அத்­து­டன் எந்­த­வி­த­மான கடு­மை­யான தொந்­த­ரவோ துன்­பு­றுத்­தலோ இருக்­காது என்று நான் எண்­ணு­கி­றேன்," என்றார்.

இந்த வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் முடிவுற்ற நிலையில் இங்குள்ள வழக்கு தொடர்வதால் நீதி பரிபாலனத்துக்கு எவ்வித களங்கமும் ஏற்படாது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நீதிபதி சென்றமாதம் தீர்ப்பில் கூறியிருந்தார்.