பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாங்காங்-சிங்கப்பூர் இரு வழி விமானப் போக்குவரத்து ஏற்பாடு விரைவில் தொடங்கவிருக்கிறது.
அந்த ஏற்பாடு மே 26ஆம் தேதி தொடங்கலாம் என்று நம்பகமான வட்டாரங்களைச் சுட்டிக்காட்டி புளூம்பெர்க் தெரிவித்தது.
சிங்கப்பூருக்கும் ஹாங்காங்க்கும் இடையே விமானப் போக்கு வரத்தைத் தொடங்க பல முறை முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால் ஹாங்காங்கில் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியதால் பயண ஏற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.
புதிய ஏற்பாட்டின் மூலம் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
இது மே 26ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று இது குறித்து நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரபூர்வமாக பேச அனுமதியில்லாததால் பெயர் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்த ஏற்பாட்டின்போது கிருமித் தொற்று அதிகரிக்காவிட்டால் ஜூன் 26லிருந்து விமானங்களின் எண்ணிக்கையை கூட்டவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் ஹாங்காங், சிங்கப்பூர் இடையே பயண ஏற்பாடு அறிவிக்கப்படவிருந்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில் சிங்கப்பூர் அதனை கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிங்கப்பூருடன் விமானப் போக்குவரத்தைத் தொடங்கும் பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எந்த நேரத்திலும் இது பற்றி அரசாங்கம் அறிவிக்கலாம் என்றும் ஹாங்காங் கூறியிருந்தது.
கடந்த வாரம் வெளியிட்ட தகவலில் இரு நகரங்களுக்கு இடையே பயணத்தைத் தொடங்குவதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை என்று சிங்கப்பூர் கூறியது.
"நாங்கள் தயாரானதும் விைரவில் விமானப் போக்கு வரத்தைத் தொடங்கும் அறிவிப்பை வெளியிடுேவாம்," என்று சிங்கப்பூர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

