ஞாயிறு விடுமுறை நாளான நேற்று லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசாவில் கூட்டம் அலை மோதி யது. இரு கடைத் தொகுதிகளிலும் நீண்ட வரிசையில் ஏராளமானோர் காத்திருந்தனர்.
இருந்தாலும் கடைத் தொகுதி களில் நிலைமை கட்டுக்குள் இருந்தது.
நேற்று மாலை 4.00 மணி அளவில் பெனின்சுலா பிளாசாவுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி யாளர்கள் சென்றபோது வெளியே பெருங்கூட்டம் காணப்பட்டது.
ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நுழைய முயற்சி செய்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலிசார், கூட்டமாக நின்று கொண்டிருந்த சிலரை திருப்பி அனுப்பினர்.
பாதுகாவலர்களும் நுழைவு வாயிலில் தடுப்புகளைப் போட்டு அடைத்துவிட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் தோழிகளுடன் காத்திருந்த 37 வயது பணிப்பெண் ஒருவர், பாரம் பரிய உணவு வாங்குவதற்காக வாரயிறுதியில் தாம் இங்கு வருவது வழக்கம் என்றார்.
ஆனால் இப்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் அச்சமாக இருக்கிறது என்றார் அவர்.
லக்கி பிளாசாவிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. கடைத் தொகுதியில் நுழைந்தவர்களை பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
'ஒரு மீட்டர் இடைவெளி, ஒரு மீட்டர் இடைவெளி' என்று தூதர் களில் சிலர் உரக்கக் குரல் கொடுத்தனர். வெளிநாட்டு ஊழியர்களிடம் மிகவும் பிரபலமான இரு கடைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 10ஆம் தேதி நுழைவுக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து கடைத் தொகுதி களில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது.

