550 குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவி

550 குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவி

2 mins read
40ed3857-7548-41ad-b0ba-44b0c2bd8b1c
-

மார்­சி­லிங்-இயூ டீ குழுத்­தொகுதி யைச் சேர்ந்த 550 குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு சனி, ஞாயிறு இரு வாரமுடிவு நாட்­களில் உண­வுப் பொருட்­கள் அடங்­கிய கூடை­கள் அன்­ப­ளிப்­பா­கக் கொடுக்­கப்­பட்­டன.

அவற்­றில் அரிசி, எண்­ணெய், ரொட்­டி­கள், சர்க்­கரை முத­லான பல பொருட்­களும் இருந்­தன. இந்த ஆண்­டின் நோன்புப் பெரு­நா­ளை­யொட்டி அந்த அன்­ப­ளிப்பு­கள் வழங்­கப்­பட்­டன.

சிங்­கப்­பூர் தேசிய கூட்­டு­றவு சம்­மே­ளத்­தின் ஆத­ர­வு­டன் சிங்­கப்­பூர் வாரிய ஊழி­யர்­கள் கூட்டுறவு அமைப்பு மேற்­கொண்டு வரும் சமூக உத­வித்­திட்­டங்­க­ளின் ஒரு பகு­தி­யாக அந்தக் குடும்பங் களுக்கு உதவி கிடைத்தது.

இந்­தப் பண்­டி­கைக் காலத்­தில் குடும்­பச் செல­வு­க­ளுக்கு உத­வும் வகை­யில் இந்­தக் கூட்­டு­றவு அமைப்பு $10,000க்கும் மேற்­பட்ட அன்­ப­ளிப்­புக் கூடை­களை வழங்கி இருக்­கிறது.

சிங்­கப்­பூர் வாரிய ஊழி­யர்­கள் கூட்டு­றவு அமைப்­பின் நிர்­வா­கக் குழு, ஊழி­யர்­கள் அடங்­கிய ஏறத்­தாழ 20 தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் இந்­தக் குழுத்­தொ­குதி ஆலோ­ச­கர்­க­ளான கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங், தற்­காப்பு, மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, வட­மேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி ஹானி சோ ஆகி­யோ­ரும் சேர்ந்து அந்­தக் குடும்­பங்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டி­னர்.

இந்த ஆண்­டில் இந்­தக் கூட்டுறவு அமைப்பு குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு இத்­து­டன் இரண்­டா­வது தட­வை­யாக அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை அன்­ப­ளிப்­பா­கக் கொடுத்து உதவி இருக்­கிறது.

சீனப் பெரு­நா­ளை­யொட்டி ஜாலான் குக்­கோவில் பெரும்பாலும் வாடகை வீடுகளில் வசிக்­கும் 170 குடும்­பங்­க­ளுக்கு உண­வுப் பொருட்­க­ளை­யும் சிவப்பு அன்­பளிப்பு உறை­யை­யும் இந்த அமைப்பு கடந்த பிப்­ர­வ­ரி­யில் வழங்­கி­யது.

இந்த ஊழி­யர்­கள் கூட்­டு­றவு அமைப்­பின் தலை­வ­ரான எஸ் குலாம் இது பற்றி தெரி­விக்­கை­யில், இப்­படி உத­வு­வது இந்த அமைப்­பிற்கு வழக்­க­மான ஒன்று என்­றார்.

உறுப்­பி­னர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­று­வது ஒரு­பு­றம் இருக்க, பல்­வேறு வழி­களில் சமூ­கத்­திற்கு தாங்­கள் உதவி வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.