இளையர்கள் எதிர்காலம் குறித்த மெய்நிகர் ஆய்வரங்கம்

சுந்­தர் பில­வேந்­தர்­ராஜ்

தமிழ் இளை­யர்­கள் அடுத்த பத்து ஆண்­டு­களில் எதிர்­நோக்­கும் சவால்­கள், தீர்­வுக்­கான வழி­மு­றை­கள் போன்­ற­வற்றை அலசியது சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர் மன்­றம் அண்மையில் நடத்திய மெய்­நி­கர் ஆய்­வ­ரங்க மாநாடு.

இவ்வாண்டு தமிழ்­மொழி விழா­வின் அங்­க­மாக சென்ற 18ஆம் தேதி 'ஸூம்' இணை­யத் தொடர்­புத் தளத்தில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் 371 பேர் பங்கேற்றனர்.

'2020களில் சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர்­கள் எதிர்­நோக்­கும் சவால்கள், வாய்ப்­பு­கள், உத்­தி­கள்' என்ற கருப்­பொ­ரு­ளில் 16 அமர்வுகளில் ஆய்­வ­ரங்கு நடந்­தது. ஒவ்வோர் அமர்­வி­லும் மூன்றி­லி­ருந்து நான்கு கட்­டு­ரை­கள் படைக்­கப்­பட்­டன.

மொத்­தம் 61 படைப்­பா­ளர்­கள் தங்­கள் ஆய்­வுக் கட்­டு­ரை­க­ளை சமர்ப்­பித்­த­னர் என்­றும், இவ்வாண்டு இறு­திக்­குள் ஆய்­வ­ரங்க மாநாட்டு தொகுப்பு நூல் வெளி­யி­டப்­படும் என்­றும் ஏற்பாட்டாளர்கள் தெரி­வித்­தனர்.

கல்வி, வேலை­வாய்ப்பு, வர்த்­தக வாய்ப்­பு­கள், வியா­பார சூழல், சம­யம், பொழு­து­போக்கு, பெண்­கள் முன்­னேற்­றம், தமிழ்­மொழி, இலக்­கி­யம், மன­ந­லம், வாழ்க்கை முறை முத­லிய தலைப்­பு­களில் கட்டு­ரை­கள் படைக்­கப்­பட்­டன.

பெண்­கள் நலம், சமத்­துவம், கலை அழ­கி­யல் என மூன்று அங்­கங்களாக 'சிங்­கப்­பூர்த் தமிழ் இளை­ய­ரும் சமூகப் படி­வங்­களும்' என்ற தலைப்­பில் கட்­டு­ரையைப் படைத்தார் சுதர்­சன் அம்­ப­ல­வாணன்.

"பெண்­கள் நலமானது இன்­றைய பல இளை­யர்­க­ளின் சிந்­த­னைப்­போக்­கில் முக்­கி­ய­மான இடத்­தைப் பெற்­றுள்­ளது.

எடுத்துக்காட்டாக, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தீமிதி திரு­வி­ழா­வில், 'படு­க­ளம்' என்ற சடங்கு நடை­பெ­றும். மகா­பா­ரத கதையை சித்­த­ரிக்­கும் இந்தச் சடங்­கு, ஓர் ஆண், பெண்­ணிற்கு அவ­மானத்தை ஏற்­படுத்­தி­னால் அதற்கு தக்க தண்­டனை அளிக்­கப்­படும் என்ற நெறியை பங்­கேற்­கும் இளை­யர்­க­ளுக்கு உணர்த்­துகிறது என்றார் சுதர்­சன்.

எவ்­வாறு கடல் அலை­கள் காற்றின் திசைக்கு ஏற்ப மாற்­றம் பெற்று கரையைத் தொடு­கின்­ற­னவோ அது போலவே வாழ்வு என்ற கடலில் அலை போன்ற மாற்­றத்தை ஏற்று வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்­டும் என்­று கூறினார் 'மாற்­றத்தை ஏற்­கும் மனப்­பக்­கு­வம்' எனும் தலைப்­பில் கட்­டு­ரை படைத்த அபிஷா முத்­துக்­கு­மார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழ­லில் மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்து கல்வி கற்ற நிலை­யி­லும் தேசிய அள­வி­லான 'ஏ' நிலை தேர்­வு­களில் மாண­வர்­கள் கடந்த பத்து ஆண்டுகளில் இல்­லாத வகை­யில் சிறப்­பான தேர்ச்சி பெற்­ற­தற்கு முக்­கி­ய­மான கார­ணம் பள்­ளி­களும் பெற்­றோர்­களும் மாற்­றங்­களை ஏற்­கும் மனப்பக்­கு­வத்தை பிள்ளை­களி­டையே ஊக்­கு­வித்­த­து­தான் என்­றார் அவர்.

இளம் தமிழ் ஆசி­ரி­ய­ரான ஹஸ்வின்­நாத், இனி­வ­ரும் காலங்­களில் ஆசி­ரி­யர்­கள் தங்­களை மாற்­றங்­க­ளுக்கு தயார்­ப்ப­டுத்­தி பாடப் புத்­த­கங்­களை தாண்­டி­யும் தங்­கள் கற்­பித்­த­லைக் கொண்­டு செல்ல வேண்­டும் என்ற கருத்­தினை முன்­வைத்­தார்.

தான் பயிற்­று­விக்­கும் தொடக்கப் பள்­ளி­யில், மாண­வர்­க­ளுக்­காக தக­வல் தொழில்­நுட்­பத்தை பயன்­படுத்தி ஒரு இணை­ய­த­ளத்தை உரு­வாக்கி தான் கற்­றுக்­கொ­டுத்த பாடங்­க­ளின் காணொ­ளி­களை அதில் பதி­வேற்­றி­யும், பாடத்தை சார்ந்த சில இணைய விளை­யாட்­டு­க­ளை­யும் மாண­வர்­க­ளு­டன் பகிர்ந்துகொள்­கி­றார்.

மாண­வர்­கள் தங்­கள் திறன்­பேசி மூலம், எந்­நே­ரம் வேண்­டு­மா­னா­லும் இதைப் பயன்­ப­டுத்­த­லாம்.

ஆசி­ரி­யர்­கள் மாண­வர்­களை தன்­மு­னைப்­போடு தங்­கள் கற்றலுக்கு தாங்­களே பொறுப்­பேற்­றுக்கொள்ள வழிக்­காட்ட வேண்டும்.

இக்­கா­ல­கட்­டத்­தில் இணை­ய­த­ளத்­தில் பல தமிழ் கற்­றல் வளங்­கள் நிறைந்­துள்­ளன.

அவற்­றின் நம்­ப­கத்­தன்­மையை சோதித்துப் பார்க்கும் ஆற்­றலை மாண­வர்­க­ளுக்கு ஆசி­ரி­யர்­கள் கற்­பிக்க வேண்­டும் போன்ற கருத்து­களை முன்­வைத்­தார் ஹஸ்­வின்­நாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!