மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 44 வயது ஆடவருக்கு இன்று (ஏப்ரல் 26) 28 ஆண்டு சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தம்மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த அந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒப்புக்கொண்டார். தமது மகள் மூன்று வயதாக இருந்தபோது அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த தொடங்கியதை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
அச்சிறுமி 9 வயதானதும் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டார். கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகளாக அச்சிறுமி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
மகள் மட்டுமின்றி மகளின் தோழியையும் அவர் விட்டுவைக்கவில்லை. அந்தச் சிறுமியும் அந்த ஆடவரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளத்தைக் காக்க ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

