புதிய பெருந்திட்டம் அறிவிப்பு

புதிய பெருந்திட்டம் அறிவிப்பு

2 mins read
19f95b17-91eb-41a0-b26e-9d7fde52a9c1
-

புலனாகாச் சொத்துகள், அறிவுசார் சொத்துத் துறையில் சிங்கப்பூரின் நிலை வலுப்படும்

புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறி­வு­சார் சொத்­துக்­கான உலக மைய­மாக சிங்­கப்­பூ­ரின் நிலையை வலுப்­ப­டுத்த பெருந்­திட்­டம் ஒன்று வகுக்­கப்­பட்­டுள்­ளது.

புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறி­வு­சார் சொத்­துத் துறை­யில் வேலை­களை உரு­வாக்­கு­வ­தும் திறன்­களை வளர்ப்பதும் அதில் அடங்­கும்.

'சிங்­கப்­பூர் ஐபி உத்தி 2020' எனும் இந்தப் பத்­தாண்டு வரை­வுத்­ திட்­டம் குறித்த அறி­விப்பு நேற்று வெளி­யா­னது. சிங்­கப்­பூர் அறி­வு­சார் சொத்து அலு­வ­ல­கம் உட்­பட குறைந்­தது பத்து அர­சாங்க அமைப்பு­களை உள்­ள­டக்­கிய பணிக்­குழு ஒன்­றும் அமைக்­கப்­படும்.

பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா அப்­ப­ணிக்­கு­ழு­வின் தலை­வ­ரா­க­வும் சட்ட இரண்­டாம் அமைச்­சர் எட்­வின் டோங் அதன் துணைத் தலை­வ­ரா­க­வும் இருப்­பர்.

அறி­வு­சார் சொத்­துப் பரி­வர்த்­தனை­கள், நட­வ­டிக்­கை­கள் மூலம் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சியை ஊக்­கு­விப்­ப­தும் தொழில் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது புல­னா­காச் சொத்துகளையும் அறி­வு­சார் சொத்து­க­ளை­யும் காத்து, நிர்­வகிக்க உகந்த சூழலை ஏற்­படுத்­தித் தரு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தும் பெருந்­திட்­டத்­தின் இலக்கு­.

புத்­தாக்­கத் திற­னா­ளர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக அடுத்த தலை­முறை அறி­வு­சார் சொத்து தாக்­கல் முறையை உரு­வாக்­கு­வது போன்ற திட்­டங்­கள் வாயி­லாக அவ்­வி­லக்கு­ எட்­டப்­படும். அடுத்த ஆண்­டின் நடுப்­ப­கு­திக்­குள் அம்­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த இலக்கு வகுக்­கப்­பட்­டுள்­ளது.

வணி­க­ம­ய­மாக்­கு­வ­தற்­காக பொது நிதி­யு­டன்­கூ­டிய புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறி­வு­சார் சொத்­து­க­ளைப் பெற மேம்­பட்ட வச­தியை வழங்­கு­வது உட்­பட புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறிவு­சார் சொத்­து­க­ளைப் பயன்­ப­டுத்­தும் புத்­தாக்­கத் தொழில் நிறு­வ­னங்­களை வளர்க்­க­வும் ஈர்க்­க­வும் திட்­டங்­கள் வகுக்­கப்­படும்.

எடுத்­துக்­காட்­டாக, நிபு­ணத்­துவ புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறி­வு­சார் சொத்து சேவை­க­ளைப் பெறும் வகை­யில் நிறு­வ­னங்­க­ளுக்­கான இணை­யச் சந்­தையை வழங்­கும் புதிய தளம் ஒன்று அமைக்­கப்­பட்டு வரு­கிறது.

மதிப்­பீட்டு வழி­காட்டி நெறி­முறை­களை வகுக்­கும்­வி­த­மாக அனைத்­து­லக புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறி­வு­சார் சொத்­துக் குழுவை அமைக்­கும் நட­வ­டிக்­கையை சிங்­கப்­பூர் முன்­னெ­டுக்­கும். அத்­துறை சார்ந்த மதிப்­பீட்டு நிபு­ணர்­கள் தொகு­தி­யை­யும் உரு­வாக்க திட்­ட­முள்­ளது.

புத்­தாக்­கம் சார்ந்த பணி­களில் புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறி­வு­சார் சொத்­துத் தேர்ச்­சி­க­ளை­யும் திறன்­க­ளை­யும் வளர்க்­க­வும் அத்­துறை சார்ந்த நிர்­வா­கத்­திற்­கான தேசிய திட்­ட­நி­லை­களை உரு­வாக்­க­வும் திட்­டங்­கள் இருக்­கின்­றன.

சிங்­கப்­பூர் புதிய தொழில் வாய்ப்பு­களை உரு­வாக்­க­வும் புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறிவு­சார் சொத்து நிபு­ணத்­துவ சேவை­களில் நல்ல வேலை­களை உரு­வாக்­க­வும் இந்­தப் பெருந்­திட்­டம் உத­வும் என்று அமைச்­சர் இந்­தி­ராணி கூறி­னார்.

"புல­னா­காச் சொத்­து­கள் மற்­றும் அறி­வு­சார் சொத்து நிர்­வா­கத்­தி­லும் உத்­தி­யி­லும் நிறு­வ­னங்­கள் திறன்­க­ளை­யும் தேர்ச்­சி­க­ளை­யும் மேம்­ப­டுத்த முடி­யும் என்­ப­தோடு, கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிந்­திய பொரு­ளி­யல் சூழ­லில் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் வலு­வாக மீண்­டெ­ழ­வும் இந்­தப் பெருந்­திட்­டம் உத­வும்," என்றார் அவர்.