67% சிங்கப்பூரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம்

67% சிங்கப்பூரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம்

1 mins read
d5bf505d-064b-4d3b-bb85-2ad3dabc6c57
-

சிங்­கப்­பூ­ரர்­களில் மூவ­ரில் இரு­வர் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஆர்­வ­மாக இருப்­ப­தும் ஐவ­ரில் ஒரு­வர் இன்­னும் போட்­டுக்­கொள்­வதா வேண்­டாமா என இன்­னும் முடி­வெ­டுக்­கா­மல் இருப்­ப­தும் கொள்கை ஆய்­வுக் கழ­கம் மேற்­கொண்ட ஆய்­வு­ மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

அதேவேளை­யில், கிட்­டத்­தட்ட பாதிப் பேர் தடுப்­பூ­சி­யின் பாது­காப்பு, செயல்­தி­றன், பக்­க­வி­ளைவு­கள் குறித்து கவ­லைப்­ப­டு­கின்­ற­னர். குறிப்­பாக, தடுப்­பூசி பாது­காப்பு குறித்து இளை­யர்­க­ள் அதிகம் கவலைப்படுகின்றனர்.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் இருந்து இவ்­வாண்டு மார்ச் வரை 22 கட்­டங்­க­ளாக, ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் 21 வய­தைத் தாண்­டிய 500 பேருக்கு மேற்­பட்­டோ­ரி­டம் இணை­யம் வழி­யா­கக் கருத்­தாய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

சென்ற மார்ச் மாதம் நடத்­தப்­பட்ட இறு­திக் கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 67 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஆர்­வ­மாக இருப்­ப­தா­கவும் 13 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட விருப்­ப­மில்லை என்றும் தெரி­வித்­தனர்.

இத­னி­டையே, தங்­க­ளது வாழ்­வா­தா­ரங்­கள் குறித்­துப் பல­ரும் எச்­ச­ரிக்­கை­யு­டன் உள்­ள­போ­தும் கொவிட்-19 பர­வ­லைச் சமா­ளித்து வாழ நன்கு கற்­றுக்­கொண்டு இருப்­ப­தா­க­வும் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் ஆய்­வ­றிக்கை கூறு­கிறது.

அதே­போல, கடந்த ஓராண்­டில் ஒட்­டு­மொத்த வேலைச் சந்தை குறித்த நம்­பிக்­கை­யும் குறிப்­பி­டத் தக்க அளவு அதி­க­ரித்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த மே மாதம் இடம்­பெற்ற கருத்­தாய்­வில் அடுத்த ஆறு மாதங்­களில் வேலைச் சந்தை மோச­மாக இருக்­கும் என 80 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், 2021 மார்ச்­சில் நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் 42 விழுக்­காட்டினர் மட்டுமே அவ்வாறு கூறினர்.