இன, சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக தஞ்சோங் பகார் குழுத்தொகுதி, ராடின் மாஸ் தனித்தொகுதிகளின் அடித்தள அமைப்புகளும் ரோசஸ் ஆஃப் பீஸ் சமூக அமைப்பும் நோன்புத் துறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தன. இதில் (இடமிருந்து) திரு கூ சாய் கீ, திரு எரிக் சுவா, திருவாட்டி ஜோன் பெரேரா, அமைச்சர் சான் சுன் சிங், அமைச்சர் இந்திராணி ராஜா, துணையமைச்சர் எல்வின் டான், திரு மெல்வின் யோங் ஆகியோர் பங்கேற்றனர். இருநூறு குடும்பங்களையும் பல இன, சமயங்களையும் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் மெய்நிகர் தளம் மூலம் நோன்புத் துறப்பில் இணைந்தனர். செய்தி: இர்ஷாத் முஹம்மது, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மெய்நிகர் தளத்தில் சமூக நல்லிணக்க நோன்புத் துறப்பு நிகழ்ச்சி
1 mins read
-

